11/09/2011

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் மிக உயரிய நட்புறவு விருது

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் மிக உயரிய நட்புறவு விருது (ஆர்டர் ஆஃப் ஃபிரன்ட் ஷிப்) வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய எழுத்தாளர் ஜெயகாந்தன். இதற்கு முன்னதாக பிரபல திரைப்பட இயக்குநர் மிர்ணாள் சென்னுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் பிறப்பித்த உத்தரவின் நகலை இந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் நிகோலாய ஏ லிஸ்தபதோவ், ஜெயகாந்தனிடம் சென்னையில் வழங்கினார்.
இந்த நட்புறவு விருது வழங்கும் விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் ரஷ்ய அதிபரின் தூதுக் குழுவினர் விழாவில் பங்கேற்க உள்ளனர். இந்தோ - ரஷ்ய கலாசார மற்றும் நட்புறவு மையத்தின் தலைவராக ஜெயகாந்தன் உள்ளார்.
இவர் தனது எழுத்துப் பணியோடு இந்திய - ரஷ்ய நாடுகளிடையே உறவை வளர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘உன்னைப் போல ஒருவன்’ (1965) திரைப்படம் ரஷ்ய அதிபர் விருதைப் பெற்றது. இந்தோ - ரஷ்ய கலாசார மற்றும் நட்புறவு மையத்தை அவர் 2006 இல் தொடங்கினார்.


0 commentaires :

Post a Comment