11/24/2011

தாய் மொழியில் தேசிய கீதத்தை பாடும் உரிமை தமிழர்களுக்கு உண்டு அரசியல் அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது

இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் தான் பாடவேண்டும் என நிர்ப்பந்திப்பதோ அல்லது கட்டாயப்படுத்துவதோ சட்டவிரோதமான செயலாகவே கருதப்படும். தமிழ் மக்கள் தமது தாய் மொழியில் தேசிய கீதத்தை பாடும் உரிமை அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்கப்படல் வேண்டும் என சட்டம் தயாரிக்க எந்தவித நடவடிக்கை களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கராவின் வாய்மொழிமூல விடைக்கான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். இலங்கைத் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் இசைக் கப்படல் வேண்டுமென சட்டம் தயாரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப டுகின்ற தால் அவ்வாறாயின் இத்தகைய சட்டம் தயாரிக்க ஏதுவான விடயங்கள் எவை?
தான் விரும்பிய மொழியைப் பாவிக்க அரசியலமைப்பினால் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை மேற்படி நிலைமையின் கீழ் மீறப்படுவதில்லையா?
இதன் காரணமாக சிங்கள மக்களுக்கும் நாட்டின் ஏனைய இனங்களுக்கும் இடையில் உள்ள பரஸ்வர ஈடுபாட்டுக்குத் தாக்கம் ஏற்படுமா? இது குறித்து அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா என தயாசிறி ஜயசேகர எம்.பி. கேட்டிருந்தார்.
இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனிச்சிங்களத்தில் மட்டும்தான் தேசிய கீதம் பாடவேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
அப்படியானால் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற பொது மற்றும் அரச நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அது ஏன் என தயாசிரி ஜயசேக்கர மற்றுமொரு கேள்வியை எழுப்பினார்.
யாழ்ப்பாணத்தில் சில அதிகாரிகள் தன்னிச்சையாக இவ்வாறு செயற்பட்ட தாலேயே அங்கு பிரச்சினை ஏற்பட்டது.
இப்போது அந்த நிலைமை இல்லை. தமிழ் மொழியிலேயே தேசிய கீதம் பாடப்படுகிறது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பதிலளித்தார்.

0 commentaires :

Post a Comment