கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் 2011ம் ஆண்டிற்கான பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் நேரடி நிதி ஒதுக்கீடிட்டின் மூலம் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இலங்கத்துறை , இலங்கத்தறை முகத்துவாரம் ஆகிய இரு கிராமங்களுக்குமான ஆற்றுவழிப் போக்குவரத்திற்கான பயணப்பாதை படகுடன் இறங்கு துறைநிர்மானிக்கப்பட்டு முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களினால் மக்களின் பாவனைக்காக மக்களிடம் இன்று(28.11.2011) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் வெருகல் பிரதேச செயலாளர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் விஜயகாந்த் மற்றும் விவசாய திணைக்கள பிரதி பணி;பாளர், முதலமைச்ர் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் கௌரிதரன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment