கொலை செய்யப்பட்ட ஆசிரியையின் வீட்டிற்கு முதல்வர் சென்று ஆறுதல் கூறினார்கடந்த 24ந் திகதி கொலை செய்யப்பட்ட ஆசிரியை குருகுலசிங்கம் சிறிவதனி(33) அவர்களின் வீட்டிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். இன்று(28.11.2011) மூதூர் கடi;பறிச்சான் 2ம் வட்டாரத்தில் அமைந்துள்ள குறித்த ஆசிரியையின் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆசிரியையின் அம்மா, சகோதரர்கள்,சகோதரி மற்றும் உறவினர்கள் பாடசாலையின் அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடி உண்மைநிலைமைகளை கேட்டறிந்து கொண்டதோடு அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்.
ஆசிரியை கொலையுடன் சம்பந்தப்பட்ட இரு சந்தேகநபர்கள் கைது
மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் ஆசிரியை கொலை சம்பந்தமாகசம்பூர் பொலிஸார் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
நகுலேஸ்வரன்,பாலன் என்ற இருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியையிடம் இருந்து தங்க நகைகளை அபகரிக்கவே தாங்கள் இக் கொலையை புரிந்ததாக பிரதான சந்தேக நபர் நகுலேஸ்வரன் பொலிஸாருக்கு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
0 commentaires :
Post a Comment