ஒலிபரப்புத்துறை பலராலும் விரும்பப்படுகின்ற போட்டி நிறைந்த ஒரு துறையாகும். இத்துறையில் பிரகாசிப்பதற்கு முறையான பயிற்சியும் வழிகாட்டல்களும் அவசியமாகும். அறிவிப்பாளராக வேண்டும் என்ற கனவோடு இருக்கின்ற மட்டக்களப்பைச் சேர்ந்த இளுஞர் யுவதிகளின் கனவுகளை நனவாக்க இலங்கை இளைஞர் அபிவிருத்தி ஒன்றியத்தினர் முன்வந்திருக்கின்றனர்.
மட்டக்களப்பிலே அறிவிப்பாளர் பயிற்சி நெறியினை நடாத்துவதற்கு முன்வந்திருக்கின்றனர். இப் பயிற்சி நெறியில் ஒலிபரப்புத்துறை சார்ந்த பலர் விரிவுரைகளை நடாத்த இருக்கின்றனர். இப் பயிற்சி நெறியை பூர்த்தி செய்பவர்களை ஒலிபரப்புத் துறையில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவும் இருக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அறிவிப்பாளர் பயிற்சி நெறிக்காக பலர் கொழும்புக்கு சென்று பெருந்தொகைப்பணத்தை செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பயிற்சி நெறியை தொடர விரும்புபவர்கள் 0771589843 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்துகொள்ள முடியும்
0 commentaires :
Post a Comment