மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்க ளில் நேற்று மழை பெய்யாததால் இரு மாவட்டங்களிலும் இயல்பு நிலை வழமைக்குத் திரும்பியிருந்தன. நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் தமது அன்றாடப் பணிகளில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருந்த வெள்ளம் வடிய ஆரம்பித்துள்ளது.
மேற்படி இரு மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கி இருந்தன.
ஆயினும் நேற்று மழை பெய்யாததனால் வெள்ளம் வடிந்தோடி வருவதாக அங் கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.
பெரும்போக நெற் செய்கை மேற்கொள் ளப்படாத காணிகளில் வெள்ளம் தேங்கி யுள்ளதனால், விதைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையேற்பட் டுள்ளது. இம்முறை பெரும் போகத்தில் 94 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் நெற் செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் இத் தொகையில் குறைவேற்படலாம் என நம்பப்படுகின்றது.
சீரற்ற கால நிலை காரணமாக கடற் றொழிலாளர்கள் எவரும் கடலுக்குச் செல்ல வில்லை.
இதனால் மாவட்டத்தில் கடல் மீனுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பாக உள்ளதாகவும், கடுங்காற்று வீசுவதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
வெள்ள நீரை வெளியேற்றுவதில் பொது மக்கள் ஆர்வங் காட்டி வருகின்றனர்.
0 commentaires :
Post a Comment