தியாகி எனும் போது தான் கொண்ட மக்களின் உரிமைக்காய் தான் கொண்ட கொள்கைக்காய் தன்னுயிரை எவரால் கொடுக்க முடிகின்றதோ அவர்கள் தியாகிகளாக சமூகம் அங்கீகரிக்கும் அந்தவகையில் அமரர் குமாரசாமி நந்தகோபன்(ரகு) தான் சார்ந்த சமூகம் உரிமையிழந்து நிர்கதியாக நின்ற வேளையில் மக்களின் விடியலுக்காக தன் உயிர் நீத்து தியாகி ஆனார். இவர் அவுஸ்ரேலியாவில் பொறியியலாளராக கடமை புரிந்த நந்தகோபன் அவர்கள் தான் கொண்ட கொள்கையின் வழி செயற்படும் போது எதிரிகள் மூலம் தனக்கு இறப்பு நிச்சயம் என்று தெரிந்தும் துணிந்து கிழக்குமாகண மக்கள் அரசியல் hPதியாகவும்இ அபிவிருத்தி hPதியாகவும் மிகக்கடுமைகயாக பின்தள்ளப்பட்ட நிலையில் அவர்களுக்கு அரசியல் hPதியான பலத்தையும் அபிவிருத்தி hPதியான பலத்தையும் பெற்று தரும் உயரிய நோக்குடன் துணிந்து செயற்பட்டார்.அவர் கிழக்குமாகணத்தில் உருவான முதாலவது தமிழ் அரசியல் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினை சட்டபூர்வாமாக பதிவு செய்து அதன் தலைவராகவும் பணியாற்றினார்
தொடர்ந்து 2008 நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிச்சபைத்தேர்தலில் இக்கட்சியை முதன் முதலாக போட்டியிடவைத்து மட்டக்களப்பு மாநகரசபை உட்பட அனைத்து உள்ள10ராட்சி சபைகளையும் கைப்பற்றச்செய்தார் இதன் பின்னர் நடைபெற்ற கிழக்கு மாகண சபை தேர்தலிலும் வெற்றிபெற்றதனால் மாகணசபையை உருவாக்கம் பெற்றது அந்த அனைத்து வெற்றிகளின் பிண்ணியிலும் நந்தகோபனின் (ரகு) பணி மகத்தானது கட்சியின் வளர்ச்சிக்காக இரவுபகல் பார்க்காது தனது உடல்பொருள் ஆவியனைத்தையும் அர்ப்பணித்தார்.குறிப்பாக கிழக்கு மாகண சபை அமைக்கப்பட்ட பின்னர் முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளராக இருந்து அப்புதிய மாகணசபை எதிர்நோக்கிய சவால்களுக்கு சளைக்காது முகம் கொடுத்ததோடு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சர்வதேசத்திற்கு கொண்டு சென்றார். இதன் மூலம் பல செயற்;பாடுகளை இலகுவாக தமிழ் மக்களுக்காக பெற்று கொடுத்தார்.குறிப்பாக சம்பூர் உயர்பாதுகாப்பு வலயம் தொடர்பாக மக்கள் சார்பாக ராஜபக்;ஸ அரசாங்கத்திடம் கடுமையாக வாதடினார் இம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக சர்வதேச ஆதரவினை திரட்டும் வேலையினை முனைப்பாக ஈடுபட்டதருணத்தில் இனவாதிகள் அவரை இலக்கு வைத்தனார்.இவரின் திறமையும் விவேகமும் எதிரிகளை தடுமாறச்செய்தது.குறுகிய காலத்தினுள் மூதூர் கிழக்கு பிரதேசத்தில் சம்பூர் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் உயர்பாதுகாப்பு வலயத்தை நீக்கி இம் மக்களை மீளக்குடியேற்றி இதுவரை எந்த தமிழ்; தரப்பு தலைவர்களும் சாதிக்காத சாதனையை நிகழ்த்திய பெருமை அமரர் நந்தகோபனையே சாரும்.அவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கே பேர் இழப்பு என்பது காலம் கடந்து யாவரும் அறிந்த உண்மையாகும். அவர் எம்மை விட்டு அகன்றாலும் அவரின் சேவையும் பணியையும் கிழக்கு மாகண முதல்வர் தலமையிலான அணி புனிதத்தன்மையுடன் தொடரமுனைவது காலத்தின் தேவையும் அவர்கள் அமரார் மீது வைத்திருக்கும் கௌரவத்தையும் அன்பையும் வெளிக்காட்டுகின்றது.இது தமிழ் பேசும் மக்களுக்கு மகிழ்ச்சியைத்தரும் விடயமாகும்.
கனடாவில்இருந்து சாந்தன்
0 commentaires :
Post a Comment