11/27/2011

உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகளும் உறுகாமம் குளத்தின் இரண்டு வான் கதவுகளும் தற்போது திறந்து விடப்பட்டுள்ளன

மட்டு. மாவட்டத்திலுள்ள  பிரதான நீர்ப்பாசன குளங்கள் அனைத்தும்  திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன பிரிவுகளுக்கு பொறுப்பான பிரதம பொறியியலாளர் என்.கிருஷாந்தன் தெரிவித்தார்.
இதனடிப்படையில் உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகளும் உறுகாமம் குளத்தின் இரண்டு வான் கதவுகளும் தற்போது திறந்து விடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக சித்தாண்டி மற்றும் கிரான் பிரதேசங்களிலுள்ள ஆறுகளில் நீர்மட்டம் உயர்வடையும். எனினும்இ இதனால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என அவர் தெரிவித்தார்.
இதேவேளைஇ மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக காற்றுடன் கூடிய மழை பெய்த வண்ணமே உள்ளது. இதனால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் சில வீதிகளில் போக்குவரத்துக்களும் தடைப்பட்டள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 66.3 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது என மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய கடமை நேர அதிகாரி எஸ்.ரமேஸ் தெரிவித்தார்.
கடந்த 7 நாட்களில் 305.8 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வருடாந்த சராசரி மழை வீழ்ச்சி 1இ 600 மில்லி மீற்றராக உள்ள நிலையில் இவ்வருடத்தில் இன்று வரை 3இ016 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மண்டூர் வெல்லாவெளி வீதி தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அப்பகுதிக்குரிய போக்குவரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டுள்ளன. இதனால் இவ்வீதியை பயன்படுத்துபவர்கள் குருமன்வெளி – மண்டூர் ஓடத்துறையை பயன்படுத்தி வருகின்றமை  குறிப்பிடத்தது.
கிரான் புலி பாய்ந்தகல் வீதியூடனான போக்குவரத்திற்கு கடற் படையினர் தொடர்ந்து இயந்திர படகுகளை  பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 commentaires :

Post a Comment