பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கின் அவர்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கும் இடையில் இன்று(24.11.2011) முக்கிய சந்திப்பொன்று இடம் பெற்றது. மேற்படி சந்திப்பானது திருகோணமலை அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் மேற்படி சந்திப்பானது இடம்பெற்றது. மேற்படி சந்திப்பானது சிநேகபூர்வ கலந்துரையாடலாக அமைந்திருந்தது. கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் மற்றும் 2012ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற விதவைகளின் வாழ்வாதார மேம்பாடு, மற்றும் சிறுவர் கல்வி அபிவிருத்தி என்பன தொடர்பாக எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் குறித்த சில உதவிகள் வழங்குவது தொடர்பாகவும் உயர்ஸ்த்தானிகர் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment