11/24/2011

திருகோணமலை மாவட்டத்தில் கிழக்கு முதல்வரினால் தையல்இயந்திரம் வழங்கி வைப்பு

இன்று(23.11.2011) திருகோணமலை மாவட்டத்தில் தையல்பயிற்சியளிக்கப்பட்ட  பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாணசபை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட  கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பயிற்சியளிக்கப்பட்ட பெண்களுக்கு வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் வகையில் 32தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வி.ரி.பாலசிங்கம், கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் அமலநாதன், மற்றும் பயனாளிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment