11/23/2011

ஒருவருடத்தில் ஒருநாளாவது அதிகாரிகள் சபையில் சமூகம் கொடுக்காமை வேதனையளிக்கின்றது.-மாகாணசபை உறுப்பினர் சோ.புஸ்பராஜா

இன்று கிழக்கு மாகாணத்திற்கான 2012ம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டம் நிதிஅமைச்சரும் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் விவாதத்திற்காக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சோமசுந்தரம் புஸ்பராஜா உள்ளுராட்சி மண்றங்களால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்ட நிகழ்வுகள், திறப்பு விழாக்கள் முக்கிய கலந்துரையாடலுக்கு அப்பிரதேசத்தை பிரதிநிதிதுவப்படுத்துகின்ற மாகாணசபை உறுப்பினர்களுக்கு கட்டாயம் அழைப்பு விடுக்க வேண்டும்.
காரணம் உள்ளுராட்சி சபைகள் என்பது மாகாணத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் அமைச்சின் கீழ் செயற்படுகின்ற ஓர் மக்கள் அமைப்பாகும். எனவே மாகாணசபையின் கீழுள்ள இந்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களின் அப்பிரதேசத்தின் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொள்வதில் என்ன பிரச்சினை இருக்கின்றது? என அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், விசேடமாக வரவு செலவு திட்டம் சமர்ப்பிப்பது என்பது ஒருவருடத்தில் ஒருதடவை இடம்பெறுகின்ற நிகழ்வாகும். எனவே இதற்கு இடம்பெறுகின்ற வாதப் பிரதிவாதங்களின்போது பல்வேறு அமைச்சுக்கள்;, திணைக்களங்கள் பற்றி பேசப்படுகின்றது. இதன் குறித்த திணைக்களத்தலைவர்கள், அமைச்சின் செயலாளர்கள், பணிப்பாளர்கள், அதிகாரிகள் சமூகம் கொடுக்க வேண்டும். ஆனால் எமது மாகாணசபை அமர்வில் இவ்வாறு சமூகம் கொடுக்கவில்லை என்பது வேதனையளிக்கின்றது. எனவும் அவர் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment