11/22/2011

வரட்டு கௌரவத்துடன் வங்குரோத்து அரசியல் நடாத்தும் பாணியை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைவிட வேண்டும்- முதலமைச்சர் சி.சந்திரகாந்தன்

வட்டுக்கோட்டை தீர்மானத்தினூடாக தமிழ் சமூகத்திற்கு இவர்கள் சொன்ன செய்தி என்ன? தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு முறைமை குறித்த சிந்தனை 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போதே ஊற்றெடுத்தது. அதனை சரியாக புரிந்து கொள்ளாமலும்; அதன் அனுகூலங்கள் பற்றி சிந்திக்காமலும் அப்போது அதனை சரியான முறையில் ஏற்க மறுத்து விட்டார்கள். இதற்கான முழுமையான பொறுப்பையும் தமிழ் அரசியல் கட்சியின் தலைமைகளே ஏற்க வேண்டும்.  இரானுவ ரீதியிலே அதிக பாண்டித்தியம் பெற்ற விடுதலைப் புலிகளை அரசியல் கலாச்சாரத்திற்குள் உள்ளீர்க்க வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் தலைமைகளேயே சார்ந்திருந்தது.
ஆனால் அவர்கள் அப்போது அதனை செய்யவில்லை. அதன் விளைவுதான் இன்று தமிழ் சமூகம் எதிர்கொண்ட பாரிய இழப்புக்கான பின்னனி என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.  மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 2010ம் ஆண்டுக்கான  வருடார்ந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில,; நாங்கள் இன்று கிழக்கு மாகாணசபை முறைமையின் அடிப்படையிலே அழிவுற்றிருந்த கிழக்கு மாகாணத்தை சகல வசதிகளுடன் கூடிய ஓர் மாகாணமாக அபிவிருத்தி செய்து வருகின்றோம். இதற்கு வழிகோரியது 1987ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையே ஆகும்.
கடந்த காலங்களிலே தமிழீழம் சாத்தியமற்ற விடையங்களைப்பற்றி பேசிப்பேசி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தற்போதுதான் அதாவது 13ம் சுற்று பேச்சின் போதுதான் மாகாணசபை முறைமை, அதிகாரங்கள் பற்றி பேசுகின்றார்களாம். என்ன வேடிக்கை இதை நாங்கள் ஏற்றுக்கொண்டு அப்போதே செயற்பட்டிருந்தால்; எவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்கலாம். ஆனால் இவை எல்லாவற்றிக்கும் முக்கியமான காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின்  வரட்டு கௌரவத்துடன் கூடிய  வங்குரோத்துடனான அரசியல் நிலையே காரணமாகும். இந்த பாணியை இவர்கள் என்று கைவிடுகின்றார்களோ? அன்றுதான் எமது சமூகம் வளர்ச்சி பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
காலங்காலமாக எமது சமூகத்தை உசுப்பேற்றி உணர்ச்சிவசப்படுத்தி தமிழர்கள் வீரமிக்கவர்கள், வீரமறவர்கள் என்கின்ற அடைமொழிகளையும் பசப்பு வார்த்தைகளையும் கூறி அனைவரையும் அழிவுப்பாதை நோக்கி பயணிக்க வைத்தார்களே ஒழிய, ஆக்கபூர்வமாக எதையும் செய்வதற்கு இடமளிக்கவில்லை.
இவ்வாறுதான் வடக்கு தலைமைகளின் சுயநலத்திற்காய் வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஏற்படுத்தி இளைஞர் யுவதிகளை உசுப்பேத்தி அவர்களின் கைகளில் ஆயுதத்தை கொடுத்தவர்கள் இவர்கள்தான். அந்தப்பிரகடணத்தின் ஊடாக இவர்கள் சமூகத்திற்கு என்ன செய்தியை சொன்னார்கள். எதுமே இல்லை உண்மையிலே அது ஒரு குறுகிய இலாபம் தேடும் முயற்சியே ஒழிய ஒட்டுமொத்த சமூகத்திற்குமாக பொதுவான தீர்வாகவில்லை.
இவ்வாறாக காலங்;காலமாக எங்களது மக்களை ஏமாற்றுகின்ற இந்த பழமைவாதிகளை நாம் ஓரம்கட்ட வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும். கிழக்கு மக்களின் தயவில்தான் அவர்கள் கொக்கரிக்கின்றார்கள். விசேடமாக கிழக்கு மக்கள் அனைவருமே சிந்திக்க தொடங்கிவிட்டார்கள். இவர்களது மறுமுகம் எமது மாகாண மக்களுக்கு நன்கு தெரிந்து விட்டது. இனிவரும் காலங்கிளிலும் அதற்கான சரியான பாடத்தினை எம் மக்கள் புகட்டுவார்கள்.
பேச்சுவார்த்தை என்று சொல்லிக் கொண்டு வெளிநாடுகளுக்கு செல்கின்ற இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெளிநாட்டு பயணத்தில்தான் எமது மாகாண தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை புறக்கணிக்கின்றார்கள் என்று பார்த்தால் எமது நாட்டிலே இடம்பெறுகின்ற அரசுடனான பேச்சிலும் கூட இவர்களை புறக்கணிப்பது எந்த வகையில் நியாயமான செயல். அண்மையில் இடம்பெற்ற 13ம் சுற்றுப்பேச்சிலே கிழக்கு மாகாணத்தை சேர்ந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெறவில்லை. இவ்வாறான செயல் அதாவது கிழக்கு மாகாணத்தை வடமாகாணத்தவர்கள் புறக்கணிக்கின்ற செயல் காலங்;காலமாகவே இடம்பெற்று வருகின்றது. இதனை ஏன் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைபு;பு  எம்பிக்கள் புரிந்து கொள்ளவில்லை. இதனை மறைப்பதற்கும் எவ்வளவோ காரணங்களை எமது மாகாண தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் குறிப்பிடுவார்கள்.
  இவ்வாறு எல்லாவற்றிக்குமே காரணம் காட்டிகாட்டி தொடர்ந்தும் எமது மக்களை ஏமாற்றுகின்ற அந்த வரட்டு கௌரவத்துடன் கூடிய வங்குரோத்து அரசியலை கைவிட்டு என்று தெளிவாள தங்களது சுய சிந்தனையோடு அரசியல் செய்கின்றார்களோ அன்றுதான் இவர்கள் சுயசிந்தனையாளர்களாக எம் மக்களுக்கு ஏதாவது செய்ய முயற்சிப்பார்கள் என்பது மட்டும்தான் உண்மை எனவும் அவர் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment