11/14/2011

கிழக்கு மாகாண விவசாயத்தில் புரட்சி.

கிழக்கு மாகாணம் நாட்டின் விவசாயத்துறையில் 3ஃ1 பங்கு தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் காலம்காலமாக பாரம்பரிய முறையிலான விவசாய செய்கையே கிழக்கு மாகாணத்தில் நிலைகொண்டுள்ளது. ஆனால் தற்போது கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டிருக்கின்ற பாரிய அபிவிருத்தி திட்டங்களின் விளைவாக இன்று நவீன முறையிலான பல்வேறு தொழில்நுட்பங்கள் விவசாயத்தில் புகுத்தப்பட்டு மிகவும் பாரிய அளவிலான விவசாய உற்பத்திககள் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வருகின்ற முன்னனி விவசாய அமைப்புக்களில் ஒன்றான எழுவான் விவசாய அமைப்பானது நவீன முறையில் வேளான்மை செய்கையினை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று(13.11.2011) வவுணதீவு 8ம்கட்டை கிராமத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் நவீன முறையில் வேளான்மை நடுகின்றமையினை படத்தில் காணலாம்.

0 commentaires :

Post a Comment