மட்டக்களப்பு கல்லடியில் மாதர் சங்கப் பிரதிநிதிகளை சந்திக்கும் விசேட கலந்துரையாடல் கூட்டம் இன்று கல்லடி பல நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் விசேட சந்திப்பில் மாதர் சங்கங்கள் பலவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பில் பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவும் பிரதேசத்திலே மாதர் சங்கங்கள் ஊடாக பெண்களுக்கான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டதோடு, இப்பிரதேச விதவைகளுக்கான வாழ்வாதாரத் திட்டங்கள் தொடர்பாகவும், பிரதேச வழங்களைக் கொண்டு எவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டதோடு பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
இங்கு கருத்துத் தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் பெண்களின் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பாக பல்வேறுபட்ட செயற்திட்டங்களை நாம் செயற்படுத்தி வருகின்றோம். எமது பிரதேசத்தில் இருக்கின்ற விதவைகள் வேலையற்றிருக்கின்ற பெண்கள் நோக்கிய பல சுயதொழில் திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்க இருக்கின்றோம். கூட்டமைப்பினர் மக்களைக் குழப்பமடையச் செய்து அரசியல் நடாத்திக் கொண்டிருக்கின்றனர். மக்கள் உண்மை நிலையினை புரிந்து கொள்ள வேண்டும். ஊடகங்களிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை பேச்சுவார்த்தைகளில் இணைத்துக் கொள்ளாமை மற்றும் அமேரிக்கா கனடா போன்ற நாடுகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துச் செல்லாமை தொடர்பாக ஒரு கருத்தினைத் தெரிவித்திருக்கின்றார்கள் பிள்ளையானை ஜனாதிபதி ஏன் வெளிநாடுகளுக்கு கூட்டிச் செல்லவதில்லை அவ்வாறு இருக்கும்போது பிள்ளையான் எங்களை அழைத்துச் செல்லாதது பற்றி பேசவேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.
இவர்களின் இக் கருத்தினைப் பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சந்திப்புக்கள், பேச்சுவார்த்தைகளில், வெளிநாட்டு பயணங்களில் அக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைத்துச் செல்லப்படவில்லை ஏன் என்று கேட்டால் ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு பிள்ளையானை ஏன் அழைத்துச் செல்லவில்லை எனக் கேட்பது சிறுபிள்ளைத் தனமாக இருக்கின்றது. எமது முதலமைச்சர் ஜனாதிபதியினுடைய கட்சியல்ல எமக்கு தனி கட்சி இருக்கின்றது நாம் மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கின்றோம். முதலமைச்சரை ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லாமைக்கும் தமது கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு உறுப்பினர்களை அழைத்துச் செல்லாமைக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது. அதில் என்ன தவறிருக்கின்றது. நாம் வேறு கட்சி ஜனாதிபதி வேறுகட்சி. ஆனால் கூட்டமைப்பினர்தான் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை எதிலும் இணைத்துக் கொள்ளாமல் தொடர்ந்தும் கிழக்கு மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்.
அமேரிக்கா, கனடாவிற்கு சென்றவர்கள் யாருடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள் என்ன என்ன தீர்வுகள் எட்டப்பட்டன என்பதனையாவது கூட்டமைப்பினரால் வெளியிட முடியுமா? அமேரிக்காவில் யார் யாரைச் சந்தித்தார்கள் என்று புகைப்படத்தினையாவது வெளியிட முடியுமா? கூட்டமைப்பினர் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். போடடோ பிடிக்கவும், விருந்துபசாரத்துக்கும் சொந்தங்களை சந்திக்கவுமே கூட்டமைப்பினர் வெளிநாடு சென்றனர். நாங்களும் பல நாடுகளுக்குச் சென்றோம் இவர்களைப்போல் ஜனாதிபதியைச் சந்தித்தோம் பிரதமரைச் சந்தித்தோம் என்று பொய் சொல்லவில்லை தொடர்ந்தும் எமது மக்களை ஏமாறு சமூகமாக வைத்துக் கொள்ளவே மகூட்டமைப்பினர் விரும்புகின்றனர் மக்கள் உண்மைகளை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.
இச் சந்திப்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அதிகாரிகள் மாதர் அபிவிருத்திசங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment