பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இனந்தெரியாத நபர்கள் நடத்திய வாள்வீச்சுத் தாக்குதலில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (வுஊஊ) தலைவரான பரிதி – றீகன் என்றழைக்கப்படும் நடராஜா மதீந்திரன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (வுஊஊ) செயலகத்தை விட்டு வெளியில் வந்த பொழுதுஇ வெளியில் காத்திருந்த இனந்தெரியாத நபர்களால் சரமாரியான ஆயுதங்களால் இவர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைகளுக்கு அவர் உட்படுத்தப்பட்டுள்ளதாக முதற் கட்ட செய்திகள் தெரிவித்தன. தற்போது அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்து வரும் நிலையில் இதற்கு போட்டியாக மாவீரர் ஏற்பாட்டுக்குழு என்ற அமைப்பும் மாவீரர் தின ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இந்த மாவீரர் ஏற்பாட்டுக்கு குழுவின் அமைப்பாளர்களாக விடுதலைப் புலிகள் அமைப்பில் முழுமையான பயிற்சியுடன் யுத்தத்தில் ஈடுபட்ட போராளிகள் மே 19 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பிரான்சுக்கு தப்பி வந்த 100 க்கும் மேற்பட்டவர்கள் அங்கம் வகிப்பதாக இந்த அமைப்பின் சார்பாக புலம்பெயர் வானொலி ஒன்றில் மாவீரர் தின ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடிய தமிழ்அரசன் என்பவர் தெரிவித்திருந்தார்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நடவடிக்கைகள்இ நிதிக்கையாடல்கள் தொடர்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர் ஏற்பாட்டுக்குழுவினர் கருத்துமோதல்களையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் மாவீரர் ஏற்பாட்டுக் குழுவினர் யுத்தத்தின் பின்னர் அரசாங்கப் புலனாய்வுப் பிரிவின் அனுமதியுடன் விடுதலைப் போராட்டத்தை குழப்புவதற்காக திட்டமிட்ட வகையில் பிரான்சுக்கு அனுப்பப்பட்டவர்களே என்றும் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தனர்.
இந்த மாவீரர் தின ஏற்பாடு தொடர்பான விடுதலைப் புலிகளின் இரண்டுபட்ட குழுவினரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது
இது இவ்வாறிருக்க இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒரு சில புலம்பெயர் இணையத்தளங்கள் வெளியிட்ட செய்தியில் இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகளே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்திருந்த நிலையில் பாரிஸ் 11 இல் அமைந்துள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பரிதி தன்னைத் தாக்கியவர்கள் தொடர்பாக பிரெஞ்சு காவற்துறையினருக்கு இன்று மாலை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அவர் தனது வாக்குமூலத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்திலிருந்து தாங்கள் மூன்று பேர் வெளியேறி காரில் ஏறச்செல்ல சென்ற போது அங்கு 6 பேர் நின்றதாகவும்இ அவர்களில் சிலர் தங்களுடன் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களும் இருந்ததாகவும் அவர்களைத் தன்னால் அடையாளம் காட்டமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பிரான்ஸ்; காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பான இறுதித்தீர்ப்பு நவம்பர் நடுப்பகுதியில் வரவுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதும் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது
இதேவேளை பாரிஸில் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது இது தான் முதற்தடவையல்ல. 1994 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட சபாலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் ஆரம்பிக்கப்பட்ட கொலைக்கலாச்சாரம் அதனைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் கந்தையா நாதன்இ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகையான ஈழமுரசு இதழின் நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமை உட்பட பல்வேறு வன்முறைகளுக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற குழுக்களே முக்கிய காரணிகளாக இனங்காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் தங்களது நலன்களுக்காக மாற்றுக்கருத்தாளர்களையும் மாற்று அமைப்பைச் சேர்ந்தவர்களையும் கொன்று குவித்த கலாச்சாரம் இன்று அவர்களையே திருப்பித் தாக்குவதை புலம்பெயர் தேசங்களில் காணக்கூடியதாக உள்ளதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பாரிஸில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆயுதக்குழுக்களுடனான மோதல்கள் வன்முறைகள் பிரெஞ்சு மக்கள் மத்தியில் தமிழ்ச் சமூகம் தொடர்பான அதிருப்தி நிலையை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
0 commentaires :
Post a Comment