தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான அமைப்பின் சார்க் 17 வது உச்சி மாநாடு இன்று 10ம் திகதி மாலை ஆரம்பமாகின்றது.
மாலைதீவு, அத்து மற்றும் புவஹ்முலா நகர்களில் இன்றும், நாளையும் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டின் நிமித்தம் அவ்விரு நகர்களும் விழாக்கோலம் பூண்டுள்ளன. இந்த நகர்கள் உட்பட மாலைதீவு எங்கும் சார்க் நாடுகளின் தேசிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
சார்க் அமைப்பின் தலைமை பொறுப்பை தற்போது வகிக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று மாலைதீவுக்குச் சென்றடைந்தார்.
மாலைதீவு நேரப்படி காலை 8.45 மணிக்கு மாலைதீவு அத்து கென் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினருக்கு மாலைதீவு ஜனாதிபதி முஹம்மத் நkத்தும் அவரது பாரியார் லைலா அலி அப்துல்லா மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அஹ்மத் நkம் ஆகியோரால் சிறப்பான முறையில் வரவேற்பளிக்கப்பட்டது.
அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை, மாலைதீவு, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளின் அரச தலைவர்கள் இம்மாநாட்டில் பங்குபற்றுகின்றனர். இம்மாநாடு “பரஸ்பர தொடர்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளல்” என்ற தொனிப் பொருளில் நடைபெறுகின்றது. மாலைதீவு நாட்டில் மூன்றாவது தடவை யாக நடைபெறும் சார்க் மாநாடே இது. இம்மாநாட்டின் போது தெற்காசிய பிராந் தியத்திற்கு தாக்கம் ஏற்படுகின்ற சில விசேட விட யங்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்ற அதே நேரத்தில் அங்கத்துவ நாடுகளுக் கிடையில் சில உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட விருக்கின்றன. மாநாட்டு க்கு இணைந்ததாக அரச தலைவர்களின் இருதரப்பு பேச்சு வார்த்தைகள் சில சுற்றுக்கள் நடைபெறுமென எதிர்பார்க்கப்படு கின்றது. இவற்றைவிட சார்க் தானிய ஒதுக்கம் ஒன்றை அமைப்பது சம்பந்தமான உடன்படிக்கை உள்ளிட்ட சில உடன்படிக்கை களிலும் கையொப்ப மிடவிருக்கின்றது.
இன்றைய உலக சனத்தொகையில் சுமார் நூற்றுக்கு இருபத்தைந்து வீதம் வாழ்கின்ற தெற்காசிய பிராந்திய நாடு களுக்கிடையில் ஒத்துழைப்பிற்கான அத்தி வாரம் 1985ம் ஆண்டு பங்களாதேசத்தின் முன்னாள் ஜனாதிபதி சியாஉர் ரஹ்மானின் கருத்தின் பிரகாரம் இடப்பட்டது. சார்க் ஒத்துழைப்பின் மூலம் கலாசார, வலுசக்தி, சூழல், வியாபாரம், வர்த்தகம், பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற 16 துறைகளில் தொடர்புகளை வளர்த்துக் கொள்வதற்காக அங்கத்துவ நாடுகள் செயற்படுகின்றன.
இம்மாநாட்டில் பங்கு பற்றுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் மாலைதீவு சென்றிருக்கும் குழுவில் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜின்வாஸ் குணவர்தன, ஏ.எச்.எம். அஸ்வர், கமலா ரணதுங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
0 commentaires :
Post a Comment