11/17/2011

11நிமிடங்களில் 11லட்சம் மரக்கண்றுகள் நடும் திட்டம் மட்டக்களப்பில்,

பசுமையான நாடு வளமான தேசம் எனும் தொனிப்பொருளின் அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின்  பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று நாடு பூராகவும் 11லட்சம் மரக்கன்றுகள் 11நிமிடத்திற்குள் நடும் நிகழ்வு நாடு பூராகவும் இடம்பெற்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க அதிபர் எஸ்.அருமைநாயகம் தலமையில் ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை நிகழ்வு புளுக்குனாவையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்கள் உட்பட கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மற்றும் மாகாண அமைச்சர் உதுமாலெவ்வே, ஆகியோர்கள் கண்றுகளை நாட்டும் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

0 commentaires :

Post a Comment