11/20/2011

10ஏக்கர் விசாலமான காணியில் அதிநவீன முறையில் புணர்நிர்மானம் செய்யப்படும் மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கு.

அண்மையில் விளையாட்டு துறை அமைச்சர் மஹிந்தானந்தா அழுத்கமகே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் கேட்டுக்கொண்டதற்கிணங்க மட்டக்களப்பு மாநகரின் மிக பிரபல்யமான விளையாட்டரங்கு நவீன முறையில் 2012ல் புணரமைக்கப்படுமென அவர் கிழக்கு முதல்வரிடம் அவர் உறுதியளித்திருந்தார். அதன் அப்படையில் தற்போது அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி பெவர் விளையாட்டு மைதானத்தின் புணர்நிர்மானம் தொடர்பான 1வது பூர்வாங்க ஆய்வுக்கூட்டம் இன்று கிழக்கின்  முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் மட்டு மாநகரசபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
சுமார் 10ஏக்கர் விசாலமான காணியில் உள்ளக அரங்கு மற்றும் வெளியக அரங்கு கொண்ட சகல வசதிகளும் அமைந்த நவீன முறையிலான விளையாட்டரங்கு 2012ல் அமையப்பெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியில் இதுவொரு மயில்கல் என்றால் மிகையாகாது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீத்தா பிரபாகரன், மாநகரசபை பிரதி மேயர் ஜோர்ச்பிள்ளை, பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா, மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்த்தர் ஈஸ்வரன், மாநகரசபை பொறியியலாளர் சஞ்சீவன், மாநகரசபை ஊழியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment