10/06/2011

பாகிஸ்தானில் சர்வகட்சி மாநாடு

அமெரிக்க குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு; இறைமையை விட்டுக் கொடுப்பதில்லை என தீர்மானம்

பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்காவினால் அண்மையில் சுமத்தப்பட்டுள்ள அவதூறுகளையும் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தவாறு, பாகிஸ்தானிய பிரதமர் யூசுப் ஜிலானியினால் ஒன்று கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடானது, பாகிஸ்தான் தனது இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் ஒரு போதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லையென ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாக கொழும்பிலுள்ள பாகிஸ்தானிய உயர் தூதவராலயம் அறிவித்துள்ளது.
சர்வகட்சி மாநாட்டின் இறுதியில், கலந்து கொண்ட 32 அரசியல் கட்சிகளும், “பாகிஸ்தானின் இறைமையினதும் அதன் ஆட்புல ஒருமைப்பாட்டினதும் பாது¡ப்பு ஒருபோதும் விட்டுக் கொடுக்கப்பட முடியாதவை” என உறுதிபூண்டுள்ளன.
மிகவும் ஆழமாக இடம்பெற்ற கலந்துரையாடப்படலின் இறுதியில் சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் 13 அம்ச தீர்மானமொன்றை ஏகமனதாக நிறைவேற்றின. இதன்படி, பாகிஸ்தானுக்கு எதிராக கூறப்படுகின்றவைகள், எவ்வித அர்த்தமும் இல்லாதவையாக இருப்பதுடன் பங்காளரான அணுகுமுறைக்கு அவமானத்தை தேடித்தருபவையாகவும் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளன.
சர்வகட்சி மாநாடு மேலும் குறிப்பிடுகையில் பாகிஸ்தான் சமாதானத்தை நேசிக்கும் ஒரு நாடு என்ற வகையில் உலகின் அனைத்து நாடுகளுடனும், இறைமைச் சமத்துவம், பரஸ்பர விருப்புகள் மற்றும் கெளரவம் என்ற அடிப்படையில் நேயமானதும் சுமுகமானதுமான உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புகிறது.
இச் சர்வகட்சி மாநாட்டை பிரதமர் யூசுப் ஜிலானி ஒன்றுகூட்டியதன் காரணம் அரசியல் அரங்கின் ஊடே உள்நாட்டு மற்றும் வெளியக பாதுகாப்பு தொடர்பாக நாடு எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய மிகவும் நுண்ணியதான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காகும். நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பாகிஸ்தான் தேசம் ஒன்றிணைந்துள்ளதை வெற்றிகரமாக நடாத்தப்பட்டுள்ள சர்வகட்சி மாநாடு எடுத்துக் காட்டுவதாக பிரதமர் எடுத்து உரைத்தார். “நாம் ஒரு போதும் பாகிஸ்தானின் பாதுகாப்பு குறித்து எவருக்கும் மோசமான எண்ணங்களை ஏற்படுத்த அனுமதிக்கப் போவதில்லை. நாம் யுத்தத்தை விரும்பவில்லை. எமது நாட்டிலும் அதற்கு அப்பாலும் சமாதானத்தையே விரும்புகிறோம். சமாதானத்தை ஏற்படுத்துவதில் பாகிஸ்தான் தன் பங்கை கட்டாயம் செய்வோம்” என்றார். கருத்தரங்கின் ஆரம்பத்தில் பிரதம மந்திரி, பாதுகாப்பு சுற்றாடல் தொடர்பாக பங்கு பற்றியோரை நம்பிக்கைக்குட்படுத்தினார்.
சர்வகட்சி மகாநாடானது, பாகிஸ்தானிய மக்களினதும் பாதுகாப்புப் படையினரதும் குறிப்பாக கைபர் பக்தூங்வாவிலும் பழங்குடிமக்களின் பிரதேசங்களிலும் உயிர்த்தியாகங்களை ஏற்றுக் கொள்கிறது. அத்துடன் சர்வதேச சமூகமானது இத்தகைய மகத்தான தியாகங்களையும் பாகிஸ்தானின் அளப்பறிய சேதங்களையும் அங்கீரித்தல் வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது

0 commentaires :

Post a Comment