10/05/2011

தேர்தல் பிரசாரங்கள் நள்ளிரவுடன் நிறைவு: பிரதான கட்சிகள் இறுதி நேரத்திலும் தீவிரம் கண்காணிப்பு பணிக்கு இந்திய தேர்தல் அதிகாரிகள் வருகை

இருபத்து மூன்று உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் பிரசாரப் பணிகள் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றன. இந்நிலையில், பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தமது தேர்தல் பிரசாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
கொழும்பு மாநகரசபையை இலக்குவைத்து பிரதான கட்சிகள் பிரசாரப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளதால் நகரில் பெரும் விறுவிறுப்பான நிலை காணப்படுகிறது.
அதேவேளை, கண்டி, தெஹிவளை- கல்கிஸ்ஸை ஆகிய மாநகரங்கள் தொடர்பில் இரு பிரதான கட்சிகளும் கூடுதல் கவனம் செலுத்தி பிரசாரப் பணிகளை முன்னெடுத்து வரு வதையும் காணமுடிகிறது.
பாதுகாப்பு ஏற்பாடு
உள்ளூராட்சி சபைகளிலும் பாதுகா ப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார். இதற்கு தேர்தல் நடைபெறும் அனைத்து தேர்தல் தொகுதிகளிலுமுள்ள பொலிஸ் நிலையங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
இந் நிலையில் இன்று நள்ளிர விற்குப் பின்னர் தேர்தல் சட்ட விதிகளை மீறி பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் யாராகவிருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை யெடுக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுவரை தேர்தல் வன்முறைகள் தொடர்பாக 129 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. வன்முறைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 185 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருப் பதாகவும், தேர்தல் வசதிகளை மீறி செயற்பட்டமை க்காக 41 வாகனங்கள், கைப்பற்றப்பட்டி ருப்பதாகவும் அவர் கூறினார்.

கண்காணிப்புக் குழு
எதிர்வரும் 08ம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான கண்காணிப்பு பணிகளை தேர்தல்கள் செயலகமும் பப்ரல் அமைப்பும் இணைந்து முனனெடுத்து வருகின்றன.
தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவின் பணிப்புரைக்கமைய தேர்தர்கள் செயலகத்தின் உயரதிகாரிகள் தேர்தல் நடபெறும் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான முஸ்தீபு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கென விஜயம் மேற்கொண்டிருப்பதாக தேர்தல்கள் பிரதி ஆணையாளர் எம். எம். மொஹம்மட் தெரிவித்தார்.
அதேவேளை பிரதி ஆணையாளர் கல்முனைக்கு இன்று விஜயம் செய்துள்ளார். அவர் அங்கிருந்து பதுளை, நுவரெலியா, ஆகிய மாவட்டங்களின் தேர்தல் நடை¦றும் உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் ஏற்பாடுகளை கண்காணித்து அங்கு நிலவும் குறைகளை நிவர்த்தி செய்யவுள்ளார்.
பப்ரல் அமைப்பு வேட்பு மனு தாக்தகல் செய்யப்பட்ட தினம் தொடக்கம் கண்காணிப்பின் ஈடுபட்டு வருகிறது. 900 கண்காணிப்பாளர்களையும் 30 இற்கு மேற்பட்ட வாகனங்களை தேர்தல் தினத்தன்று ரோந்தில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுத்திருப்பதாக அதன் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இந்திய குழு வருகை
இந்திய தேர்தல் ஆணையகத்திலிருந்து ஆறு உயரதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நேற்று இலங்கை வந்துள்ளது.
இக்குழு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் வேண்டுகோளுக்கிணங்க நடைபெறவுள்ள 23 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்காகவே இலங்கை வந்திருப்பதாக நேற்று பிரதி ஆணையாளர் எம். எம். மொஹமட் தினகரனுக்குத் தெரிவித்தார்.
இவர்களில் மூவர் அடங்கிய குழு கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கும் ஏனைய மூவரைக் கொண்ட குழு மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய இடங்களுக்கும் சென்று தமது ஆராய்வினை மேற்கொள்ளவுள்ளது.
குஜராத் மாநில மேலதிக தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தந்திருக்கும் இவர்களுக்கு இலங்கைத் தேர்தல் சட்டங்கள் பற்றி அறிவூட்டும் கருத்தரங்கு நேற்று தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் 08ம் திகதி நடைபெறவுள்ள 23 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தலில் 15 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
ஓகஸ்ட் 18 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 25 ஆம் திகதி வரை வேட்பு மனுக்கள் கோரப்பட்டிருந்தன. 23 உள்ளூராட்சி சபைகளுக்குமென 6 ஆயிரத்து 488 பேர் போட்டியிடுகின்றனர். செப்டம்பர் 29, 30 ஆகிய தினங்களில் தபால் மூல வாக்களிப்பு நடைபெற்றது.

0 commentaires :

Post a Comment