10/03/2011

துரித அபிவிருத்தி காணும் எமது மாவட்டத்திற்கு தடையாக இருப்பது மதுபாவனையே – முதலமைச்சர்.

கிழக்கு மாகாணம் மக்கள் பிரதிநிதிகளால் பொறுப்பு ஏற்கப் பட்டபோது  அதாவது 2008 ம் ஆண்டு உலக வங்கி தரவுகளின் படி மிகவும் பின்தங்கிய ஓர் மாகாணமாக இருந்தது .அதாவது ஒன்பது மாகாணங்களிலேயும் கடைசி மாகாணமாகக் காணப்பட்டது .ஆனால் இந்த மூன்று வருட காலங்களுக்குள் சகல துறைகளிலும் கிழக்கு மாகாணம் துரித அபிவிருத்தி கண்டு வருகிறது .
அதாவது விவசாயம் மீன்பிடி கால்நடை என அனைத்து துறைகளிலும் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி கண்டு வருகின்றது .உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தினை எடுத்துக்கொண்டால் பால் உற்பத்தியிலே 2010 ம் ஆண்டு ஒரு நாளைக்கு 7700  லீற்றர் வீதம் பால் பெறப்பட்டது .ஆனால் 2011 ம் ஆண்டு 13500  லீற்றர் பால் பெறப்படுகிறது .பால் உற்பத்தியில் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டிருக்கிறது .அதே போன்று நெல் உற்பத்தியை எடுத்துக் கொண்டால் விசேடமாக சிறுபோக உட்பத்தியிலே 2010 ம் ஆண்டு 86387  மெற்றிக் தொன் நெல் அறுவடை செய்யப்பட்டது அதே  போன்று 2011 ம் ஆண்டு 108510 மெற்றிக் தொன் நெல் பெறப்பட்டுள்ளது எனவே நெல் உற்பத்தியிலும் பாரிய அபிவிருத்தி காணப்படுகின்றது .அதே போன்று ஒப்பீட்டு ரீதியில் மீன்பிடித்துறையிலும் அதிக அபிவிருத்தி காணப்படுகின்றது .எனவே அனைத்து துறைகளிலும் மட்டக்களப்பு மாவட்டம் துரித அபிவிருத்தி கண்டு வருகிறது .ஆனால் ஒரு வேதனையான விடயம் எவ்வாறான அபிவிருத்தியினை எமது மாவட்டம் கண்டாலும் மது பாவனைக்காக மாதாந்தம் சுமார் பல கோடி ரூபாய் பணம் எமது மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டத்திற்கு செல்கிறது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று வந்தாறுமுலை பொதுச் சந்தைக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது குறிபபிடடார்.

0 commentaires :

Post a Comment