திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய்லாமாவுக்கு தென்னாபிரிக்கா செல்ல விசா கிடைக்காததால், சர்வதேச காந்தி அமைதி விருது இந்தியாவில் வழங்கப்பட உள்ளது. நோபல் பரிசு பெற்ற திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு தென்னாபிரிக்காவில் உள்ள காந்தி அறக்கட்டளை, சர்வதேச காந்தி அமைதி விருதை அறிவித்துள்ளது. தென்னாபிரிக்காவும் சீனாவும் வர்த்தக ரீதியாக நட்பு நாடுகள் என்பதால், சீனாவின் நிர்பந்தத்தால் தலாய் லாமாவுக்கு விசா வழங்காமல் தென்னாபிரிக்க நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.
இதையடுத்து, இந்த விருதை காந்தியின் பேத்தி இலா இந்தியாவுக்கு வந்து, தலாய் லாமாவுக்கு வழங்க உள்ளார். எனினும் சம்பிரதாயப்படி தலாய் லாமாவின் பிரதிநிதி சோனம் டென்சிங், தென்னாபிரிக்காவில் இந்த விருதை பெற்றுக்கொள்ள உள்ளார்.
நோபல் பரிசு பெற்ற ஆர்ச் பிஷப் டெஸ்மான்ட் டுட்டுவின் 80வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள டர்பனுக்கு வரும்படி தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விசா கிடைக்காத காரணத்தால், இந்த விழாவில் கலந்து கொள்வதையும் தலாய் லாமா ரத்துச் செய்துள்ளார்
0 commentaires :
Post a Comment