- எம்.எம்.எம்.ஹன்ஸீர்.
மூன்றாவது கட்டமாக நடைபெற்ற 23 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டது போல அரசாங்கம் அதிகளவிலான (21) சபைகளை கைப்பற்றிய போதும் முக்கியமான இரு மாநகர சபைகளின் அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடைக்கவில்லை. கொழும்பு மாநகர சபையை ஜக்கிய தேசிய கட்சியும், கல்முனை மாநகர சபையை முஸ்லீம் காங்கிரசும் கைப்பற்றியுள்ளன. காலம் காலமாக முஸ்லீம் காங்கிரசின் கோட்டையாகவுள்ள கல்முனை மாநகர சபையை அக்கட்சி மீண்டும் கைப்பற்றியிருப்பது ஆச்சரியத்தக்க விடயமல்ல, என்ற போதிலும் மாநகர சபை தேர்தலுக்காக அக்கட்சி முக்கியஸ்தர்களால் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரமும், 2013ஆம் ஆண்டு நடைபெற எதிர்பார்க்கப்படும் கிழக்கு மாகாண சபை தேர்தலுக்காக அக்கட்சி வகுக்கின்ற வியூகமும் இனவாதத்தை நோக்கிய பயணமாக அமைகின்றதே என்ற ஜயத்தை உண்டுபண்ணுகின்றது.
கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றிய கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான பஷீர்சேகுதாவூத் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான ஒத்திகையாகவே கல்முனை மாநகர சபை தேர்தலை மு.கா பார்ப்பதாகவும், முஸ்லீம் முதலமைச்சரை பெறுவதற்கு முன் ஏற்பாடாகவே கல்முனையில் தனித்து போட்டியிடுவதாகவும், கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கல்முனை தொகுதிக்கு வருகைதந்து முஸ்லீம் முதலமைச்சரை உறுதிப்படுத்தினால் மாத்திரமே மு.கா அரசாங்கத்துடன் இணைந்து மாகாணசபை தேர்தலை சந்திக்கும் என்றும் இல்லையேல் மு.கா சார்பாக முஸ்லீம் முதலமைச்சரைப் பெறுவதற்காக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்ற தொனிப்பட உரையாற்றியிருந்தார். பஷீர்சேகுதாவூத் மட்டுமல்லாமல் கட்சித்தலைவர் ரவுப்ஹக்கீம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் இத்தொனிப்படவே பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தனர். தற்பொழுது மு.கா ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நிலையிலும், பல கட்சிகள் அங்கம் வகிக்கின்ற ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக மாகாண சபை தேர்தலுக்கு முன் இனம் சார்பாக முதலமைச்சர் உறுதிப்படுத்தப்படமாட்டார் என்பது தெரிந்த நிலையிலும்; மு.கா இவ்வாறான பிரச்சாரத்தை மேற்கொள்வது ஏன்?.
தற்போது கிழக்கு மாகாணத்தில் தமிழ் முதலமைச்சர் பதவியில் இருக்கின்றார். எதிர்காலத்தில் முஸ்லீம், சிங்கள இனத்தவர்கள் முதலமைச்சராக வரவாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் தான் தமிழ், முஸ்லீம், சிங்கள மூன்று இனத்தவர்களும் பரவலாகவும் செறிவாகவும் வாழ்கின்றனர். மு.கா வின் முஸ்லீம் முதலமைச்சர் கோஷமானது தவறான ஒன்றல்ல. ஆனால் அதனை இனவாதத்தின்னூடாக பெறமுயற்சிப்பது கிழக்கு மாகாணத்தின் சகோதர அச்சுறுத்தலுக்கு பெரும் சவாலாக அமையும். இது வட,கிழக்கில் TNA யினால் கட்டியெழுப்பப்படுகின்ற தமிழ் இனவாதத்தின் மறைமுக நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டு வட, கிழக்கில் மீண்டும் இன ரீதியான முரண்பாட்டைத் தோற்றுவிக்கலாம். மு.கா கிழக்கு மாகாணத்தில் தனது செல்வாக்கினை இனவாதத்தின்னூடாக ஸ்திரப்படுத்திக்கொள்ள முனைவதையே கல்முனை மாநகர சபை தேர்தல் கோடிட்டுக்காட்டுகின்றது. அத்துடன் முஸ்லீம் முதலமைச்சர் கோஷமானது தமிழ் குறும் தேசிய வாதத்துடன் இணைந்து செயற்படுகின்ற மு.கா மறைமுக நிகழ்ச்சித்திட்டத்தையும் வெளிப்படுத்துகின்றது.
தமிழ்த்தேசிய வாதத்தின் வட, கிழக்கு இணைப்பிற்கு மு.கா கொள்கை ரீதியாக எப்போதும் எதிர்ப்புத் தெரிவித்ததில்லை. இணைந்த வட, கிழக்கில் தான் மு.கா. வின் ‘தென்கிழக்கு அலகு’, முஸ்லீம்களுக்கான ‘கரையோர மாவட்டம்’ போன்றவற்றுக்கு வலு இருக்கும். தமிழருக்கான தனிநாடு, சுயஆட்சி போன்றே ‘தென்கிழக்கு அலகு’, ‘கரையோர மாவட்டம்’ என்பன முஸ்லீம்களை உணர்ச்சிவசப்படுத்தும் கோஷமாகும். இணைந்த வட, கிழக்கில் முஸ்லீம் மக்கள் சிறுபான்மையினராக ஒதுக்கப்படும் போது நிலத்தொடர்பு அற்ற ‘தென்கிழக்கு அலகு’ அதற்கான சரியான நிவாரணம் எனவும், அது மு.கா வினால் மாத்திரமே சாத்தியப்படும் என்பது வட, கிழக்கு இணைந்திருந்த போது முஸ்லீம் மக்களின் எண்ணப்பாடாகயிருந்தது. இதற்கு வலு சேர்ப்பது போல தென்கிழக்கு பல்கலைகழகம், ஒலிவில் துறைமுகம் என்பன மறைந்த மு.கா தலைவர் ஆ.ர்.ஆ. அஷ்ரப் அவர்கள் அமைச்சராக இருந்த போது கொண்டுவரப்பட்டது. இந்திய, இலங்கை ஒப்பந்தத்தினூடாக வட, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட போதும் அது தொடர்பாக மு.கா கருத்துக்கள் கேட்கப்படவில்லையாயினும் இணைந்த வட, கிழக்கே மு.கா வின் வளர்ச்சிக்காக சிறந்த வழியாக அமைந்தது.
தற்போது வட, கிழக்கு பிரிக்கப்பட்ட நிலையில் முஸ்லீம் மக்கள் அபிவிருத்தியில் அதிகளவான நாட்டம் கொண்டுள்ளனர். அபிவிருத்தி என்பது அரசாங்கத்துடன் இணைந்து இருந்தால் மாத்திரமே சாத்தியமாகும். 1994ஆம் ஆண்டு தொடக்கம் இறக்கும் வரை அஷ்ரப் அவர்கள் பொதுசன ஜக்கிய முன்னனி அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருந்தார். எனவே ‘தென்கிழக்கு அலகு’ என்ற கோஷத்துடன் சமாந்தரமாக அதிகளவான அபிவிருத்திகளையும் முஸ்லீம் பகுதிகளில் மேற்கொள்ள அவரால் முடிந்தது. இதனால் மு.கா பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. அஷ்ரப்பின் பின் கட்சித்தலைவராக ரவுப்ஹக்கீம் சிறிது காலம் சந்திரிக்காவின் அமைச்சரவையில் இருந்தபோதும் அவரினால் முஸ்லீம் பகுதியில் பாரியளவிலான அபிவிருத்தியோ கட்சி செல்வாக்கையோ வளர்க்கமுடியவில்லை. அத்துடன் ரவுப்ஹக்கீம் ஜ.தே.கட்சியின் அனுதாபியாகவும் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பராக இருந்தமையால் மு.கா, ஜ.தே.கட்சியுடன் கூட்டு இணைய எதிர் கட்சி வரிசைக்கு சென்றது. மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது அமைச்சரவையில் தபால் தொலைத்தொடர்பு அமைச்சராக ரவுப்ஹக்கீம் இருந்த போதும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (வுசுஊ) வழங்கப்படாததால் அமைச்சுப் பதவியை ராஜனாமா செய்தார்.
எதிர்கட்சி வரிசையில் நீண்ட நாள் மு.கா இருந்தமையால் அபிவிருத்தியில் அதிக ஆர்வமும் அக்கறையும் கொண்ட முஸ்லீம் மக்களுக்கு ‘தனித்துவம்’ என்பதைத்தவிர வேறு எதையும் செய்யமுடியவில்லை. எனவே பல முக்கியஸ்தர்கள் தேர்தலில் வென்றபின் கட்சித் தலைவருடன் முரண்பட்டு வெளியேறி அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர்களானார்கள். ஆரம்பத்தில் மு.கா மரச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர்களாவார்கள். அடுத்த தேர்தல்களில் தனது சொந்த வாக்குவங்கியை உருவாக்கி மு.கா எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இது முஸ்லீம் பகுதிகளில் மு.கா வின் செல்வாக்கு சரிவதை கோடிட்டு காட்டியது. தொடர்ந்தும் எதிர்கட்சி வரிசையில் இருந்தால் பாரியளவிலான உட்கட்சி மோதலும், கட்சித்தலைவரையும், செயலாளரையும் தவிர ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து விடுவார்கள் என்ற நிலையில் அரசின் 18வது அரசியல் சாசன திருத்ததின் 2ஃ3 பெரும்பான்மை பெற அரசாங்கத்துடன் இணைய ஹக்கீம் அமைச்சராகவும், பஷீர்சேகுதாவூத் பிரதியமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.
இன்றைய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் செல்வாக்குடன் இருக்கவில்லை. அரசாங்கத்துடன் இணைய இரு அமைச்சரவை அமைச்சுப் பொறுப்புகளும் இரு பிரதியமைச்சுப்பதவியும் கோரப்பட்ட போதும் ஒரு அமைச்சுப்பதவியும் ஒரு பிரதியமைச்சர் பதவியும் கிட்டியது. அதுவும் பாரியளவில் அபிவிருத்திப்பணி செய்யமுடியாத அமைச்சுப்பொறுப்புக்களே வழங்கப்பட்டன. எதிர்க்கட்சியிலிருக்கும் போது மஹிந்த அரசாங்கத்தின் நீதித்துறையும், நிர்வாகத்துறையும் பெரும் குற்றம் சாட்டிய இதே ரவுப்ஹக்கீம் இப்போது அரசாங்கத்தின் நீதித்துறை புகழவேண்டிய அமைச்சராகவுள்ளார். பஷீர்சேகுதாவூத்தின் நிலைமையும் இதே தான். மு.கா அரசாங்கத்துடன் வாஞ்சையுடன் இணையவில்லை. வேறு வழியின்றியே இணைந்தது.
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கான தகுந்த காரணமும் அதனை முஸ்லீம் மக்கள் ஏற்றுக்கொள்வார்களாக இருக்குமானால் மு.கா அரசாங்கத்தை விட்டு வெளியேற தயங்காது. அதற்கு தகுந்த தருணமாக கிழக்கு மாகாண சபைத்தேர்தலையும், தகுந்த காரணமாக முஸ்லீம் முதலமைச்சர் கோஷத்தையும் பயன்படுத்த மு.கா எதிர்பார்க்கின்றது.
மு.கா வின் கிழக்கு மாகாணத்திற்கான முஸ்லீம் முதலமைச்சர் கோஷமானது வடக்கிலும் கிழக்கிலும் TNAக்கு மிகவும் சாதகமான விடயம். தமிழ்ப்பகுதிகளில் TNA பலம் பெறுவதையும், முஸ்லீம் பகுதிகளில் மு.கா பலம் பெறுவதையும் இரு கட்சிகளும் பரஸ்பரம் விரும்புகின்றன. அதற்கு ஏற்றார் போலவே தமது நிகழ்ச்சி நிரலையும் இக்கட்சிகள் அமைத்திருக்கின்றன. மு.காவைப் பொறுத்தவரை கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமது கட்சி சார்பாக முஸ்லீம் முதலமைச்சரைஅல்லது TNA சார்பாக ஒரு தமிழ் முதலமைச்சரை விரும்புகின்றது. இவ்விரண்டில் எது நடந்தாலும் அது இரு சமூகத்துக்கும் பாரிய தீங்காகவும் இரு கட்சிகளுக்கு பாரிய நன்மையாக அமைந்துள்ளது. TNAயின் அதி தீவிர போக்காளர்களுக்கு இவ்வாறான ஒரு கனவும் உண்டு, அது வடக்கில் TNA சார்பான முதலமைச்சரும் கிழக்கில் மு.கா ஆதரவுடன் TNA முதலமைச்சரும் அல்லது TNA ஆதரவுடன் மு.கா முதலமைச்சரும் தெரிவு செய்யப்பட்டால் இரு மாகாணத்திலும் மீண்டும் வட, கிழக்கு இணைப்பிற்கான தீர்மானத்தை நிறைவேற்றலாம் என்பதே.
கிழக்கு மாகாணத்தில் கட்சிகளின் வாக்குவங்கியை நோக்கும் இடத்தில் மு.கா, TNAயின் கனவுகள் நனவாவது கடினமான விடயமாக தோன்றுகின்றது.
2008ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலில்:
ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு (சுதந்திரகட்சி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்) பெற்ற வாக்குகள் 308,886 இது அளிக்கப்பட்ட வாக்குகளில் 52.21% மாகும். ஜக்கிய தேசிய கட்சி (மு.கா, TNA ஆதரவுடன்) பெற்ற வாக்குகள் 250,732 இது அளிக்கப்பட்ட வாக்குகளில் 42.38% மாகும்.
2010ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு, அம்பாறை,திருகோணமலை): ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்ற வாக்குகள் 253,889 இது 42.84% மாகும்.
2008ம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சுமார் 50,000 வாக்கு இழப்பு ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் அதன் பிரதான பங்காளி கட்சியான TMVP பாராளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டமையாகும். ஆனால் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் TMVP அரசாங்கத்துடன் இணைந்து கேட்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே ருPகுயுயின் வாக்குவங்கி உயர்வடையுமே தவிர வீழ்ச்சியடையப் போவதில்லை.
ஜ.தே.க, மு.கா இணைந்து பெற்ற வாக்குகள் 153,377 இது 25.47மூ 2008ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை விட சுமார் 100,000 வாக்குகள் இழப்பு ஏற்பட்டுள்ளன.
நடைபெறவுள்ள மாகாண சபைத்தேர்தலில் மு.கா தனித்து போட்டியிட்டால் ஜ.தே.க வாக்குகள் அதற்கு கிடைக்கப்போவதில்லை. எனவே இவ்வாக்கு எண்ணிக்கை இன்னும் பாரியளவில் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
வுNயு பெற்ற வாக்குகள் 126,398 இது 23.65% மாகும். இன்றைய நிலையில் நடைபெறவுள்ள மாகாண சபைத்தேர்தலில் இவ்வாக்கு எண்ணிக்கையிலும் வீழ்ச்சிக்கான வாய்ப்புகளே அதிகமுள்ளன.
வுNயு பெற்ற வாக்குகள் 126,398 இது 23.65% மாகும். இன்றைய நிலையில் நடைபெறவுள்ள மாகாண சபைத்தேர்தலில் இவ்வாக்கு எண்ணிக்கையிலும் வீழ்ச்சிக்கான வாய்ப்புகளே அதிகமுள்ளன.
எனவே நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில் மாகாணத்தில் தற்போது வலுப்பெற்று வரும் சகோதரத்துவ உறவை சீர்குலைக்கவோ, இனவாத கருத்துகளினூடாக தமது வாக்குவங்கி உயர்த்துவதோ கடினமான காரியமாக இருக்கப்போகின்றது.
0 commentaires :
Post a Comment