அமெரிக்காவில் வோல் தெரு ஆக்கிரமிப்பு இயக்கத்தின் பேராட்டம் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது. நியூயோர்க் மட்டுமல்லாமல், தற்போது நாடு முழுவதும் போராட்டம் பரவி வருகிறது. இப்போராட்டத்திற்கு அமெரிக்கப் பேரறிஞர் நோம், சாம்ஸ்கி போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நியூயோர்க் நகரில் உள்ள பரூக்ளின் பாலத்தில் சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 700 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் ஆர்ப்பாட்டத்தை மேலும் தூண்டிவிட்டுள்ளது. நியூயோர்க், போஸ்டன், லொஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. லொஸ் ஏஞ்சல்சின் சிட்டி ஹொல் கட்டடம் முன்பு நேற்று மிகப் பிரம்மாண்டமான அளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்நிலையில் இந்த வாரத்தில் டென்னிசி மாகாணத்தின் மெம்பிஸ் மேரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமோர், மின்னசோட்டா மாகாணத்தின் மின்னபோலிஸ், ஹவாய் தீவின் ஹிலோ, டெக்சாஸ் மாகாணத்தின் மெக்அலன் ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கப் போவதாக, ‘தொடர் ஆக்கிரமிப்பு’ என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் பத்திரிகைகள் இந்த ஆர்ப்பாட்டங்களைப் பற்றி தரக் குறைவான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன. ஆர்ப்பாட்டங்கள் பற்றி அடக்கி வாசிக்கின்றன. அதேநேரம், அமெரிக்கா மட்டுமின்றி உலகளாவிய சிந்தனையாளர்கள் வட்டாரத்தில் இவை பெரும் ஆதரவு பெற்று வருகின்றன. எகிப்தில் கடந்த ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் தலைநகர் கெய்ரோவில் உள்ள தஹ்சிர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் நாள் கணக்கில் கூடி, தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை சதுக்கத்தை விட்டு வெளியேறப் போவதில்லை என்று முடிவெடுத்து போராடியதைத் தான், தற்போது ‘வோல் தெரு ஆக்கிரமிப்பு இயக்கமும்’ பின்பற்றி வருகிறது.
நியூயோர்க்கின் ஜுகோட்டி பூங்காவில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கியுள்ளனர். இவர்கள் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்கின்றனர். இங்கிருந்தபடியேதான் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படு கின்றன. எகிப்து புரட்சிக்கும் இப்போராட்டத்திற்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம், எகிப்து புரட்சி நாட்டின் தலைமையை எதிர்த்து நடந்தது. இது, அமெரிக்காவின் நிதி சீர்கேட்டை எதிர்த்து நடக்கிறது.

0 commentaires :
Post a Comment