10/14/2011

மீயான்கல் குள பிள்ளையார் ஆலயத்திற்கு ஒலிபெருக்கி மற்றும் மின்பிறப்பாக்கி கிழக்கு முதல்வரினால் அன்பளிப்பு



கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீயான்கல் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பழமை வாய்ந்த பிள்ளையார் ஆலயத்திற்கு ஒலிபெருக்கி தொகுதி மற்றும் மின்பிறப்பாக்கியினை கிழக்கு முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் அன்பளிப்பு செய்தார். சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியிலான பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.  மேற்படி நிகழ்வில் கிழக்குமாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிரான் பிரதேச செயலாளர் கே.தவராஜா, ஆலய நிருவாகசபை உறுப்பினர்கள், விவசாயப்பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment