சிரிய அரசுக்கு எதிராக ஐ. நா. பாதுகாப்பு சபையில் ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்த கண்டன தீர்மானத்தை சீனா, ரஷ்யா தமது ‘வீட்டோ’ அதிகாரத்தின் மூலம் நிராகரித்தன. சிரியாவின் அரசுக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டம் தொ¡டர்ந்துவருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள வன்முறைகளால் 2700க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ. நா. அறிவித்துள்ளது.
இந்நிலையில் சிரிய அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐ. நா. பாதுகாப்புச் சபையில் உள்ள பிரான்ஸ் ஏனைய ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி மற்றும் போர்த்துக்கல்லுடன் இணைந்து கண்டன தீர்மானம் ஒன்றை முன்வைத்தது.
இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று முன்தினம் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதில் 15 நாடுகளில் பெரும்பான்மையான 9 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, தென்னாபிரிக்கா, பிரேஸில், லெபனான் ஆகிய நான்கு நாடுகளும் வாக்களிப்பதில் இருந்து தவிர்ந்து கொண்டன.
இந்நிலையில் இந்த தீர்மானத்துக்கு எதிராக ஐ. நா. சபையின் நிரந்தர நாடுகளான சீனா, ரஷ்யா ‘வீட்டோ’ எனும் விசேட மறுப்பாணையை பயன்படுத்தின. இதன்மூலம் சிரியா மீதான கண்டன தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
இது குறித்து ரஷ்யாவுக்கான ஐ. நா. சபை தூதுவர் விடலி சுகின்ஸ் பாதுகாப்புச் சபையில் கூறும்போது; டமஸ்கஸை அச்சுறுத்தும் தீர்மானத்திற்கு மொஸ்கோ முழுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறது. இந்தத் தீர்மானம் சமாதான வழியில் தீர்வை எட்டும் முயற்சியை சீர்குலைக்கிறது என்றார்.
அத்துடன் இந்தத் தீர்மானம் லிபியாவைப் போன்று சிரியாவிலும் இராணுவ தலையீட்டுக்கும் வழிவகுத்திருக்கிறது என்பதால் எதிர்ப்பதாகவும் ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று இந்தத் தீர்மானம் மற்றொரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதாக அமைகிறது என ஐ. நா.வுக்கான சீன தூதுவர் லி பவுடொங் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சீனா, ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத் தியதைத் தொடர்ந்து ‘பேரவமானம்’ என குறிப்பிட்டு ஐ. நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சுசன்ரைஸ் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார். இந்த வீட்டோ அதிகாரத்தின் மூலம் “சிரிய இராணுவத்திற்கு குறித்த நாடுகளால் மேலும் ஆயுதங்களை விற்க முடியும் என” சீன, ரஷ்யா மீது சுசன்ரைஸ் குற்றம்சாட்டினார்.

0 commentaires :
Post a Comment