10/31/2011

புலிகளுக்குள் குத்து வெட்டு பாரிஸில் சம்பவம்

மாவீரர் நிகழ்வு வியாபாரம்தொடர்பாக  புலிகளின் குழுக்களுக்கிடையில்சர்வதேசரீதியாக உருவாகி வரும் பங்கு பிரச்சனைகள் பூதாகரமாக உருவெடுத்து வருகின்றன அதன் விளைவாக    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆயுததாரிகள் நிகழ்த்திய வாள்வீச்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய பிரதிநிதியான திரு.பருதி அவர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகத்தை விட்டு வெளியில் வந்த பொழுது, வெளியில் காத்திருந்த முகமூடியணிந்த ஆயுதபாணிகளால் கத்திகள், வாட்கள் சகிதம் இவர் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த திரு.பருதி அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

0 commentaires :

Post a Comment