10/26/2011

பட்டிருப்பு கல்வி வலையம் நடாத்தும் சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா.

இன்று (24.10.2011) மட்ஃகளுதாவளை மகாவித்தியாலத்தில் பட்டிருப்பு கல்வி வலையத்தினால் நடாத்தப்படும் சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா பட்டிருப்பு வலையக்கல்வி பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் தலமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைத்ததோடு பாடசாலைகளுக்கான கணணிகளையும் வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் புஸ்பகுமார, மட்டக்களப்பு வலையக்கல்வி பணிப்பாளர் திருமதி. பவளகாந்தன், கோட்டக்கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்

0 commentaires :

Post a Comment