முதலமைச்சர் செயலக உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலக உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் இன்று அமைச்சு செயலாளர் s.அமலநாதன் தலைமையில் வாழைச்சேனையில் நடைபெற்றது. இதில் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டதுடன் கடந்த வருடத்திற்கான செயற்பாடுகள் ஆராயப்பட்டதுடன் 2012ம் வருடத்திற்கான புதிய செயற்பாட்டுத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் உரை நிகழ்த்துகையில் கிழக்கு மக்களின் சமூகக் கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை கடந்த 3 வருடங்களாக மேற்கொண்டுவருவதை இட்டு பூரண உள திருப்தி அடைகின்றேன். இருந்தும் எமது கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்தினை மேலும் வலுப்படுத்த வேண்டியது அத்தியாவசியமாக உள்ளது. எதிர்வரும் 2012ம் வருடம் அடையாளம் காணப்பட்ட வாழ்வாதாரம் குறைந்த மக்களின் வாழ்வாதாரத்தினை வலுவாக்குவதற்கு எம்முடன் இணைந்து அனைத்து அதிகாரிகளும் மிக வேகமாக செயற்பட வேண்டும். வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலமே நிலையான அபிவிருத்தி நோக்கி பயணிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
0 commentaires :
Post a Comment