10/26/2011

மட்டக்களப்பு உயர் தொழிநுட்ப நிறுவன மாணவர்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதில் அதிக கவனம் செலுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி.

எமது பிரதேச மாணவர்கள் கல்வித்துறையில் இன்னும் முன்னேற்றமடைய வேண்டும். அதற்காகவே நான் பல திட்டங்களை செயற்படுத்தி வருகின்றேன். இந்த உயர்தொழிநுட்ப நிறுவனத்தையும் ஏனைய உயர்தொழிநுட்ப நிறுவனம்போல் வசதிகள் அத்தனையும் நிறைந்த ஒரு நிறுவனமாக மாற்றுவதற்கு என்னால் முடிந்தவற்றை செய்வேன் மட்டக்களப்பு உயர் தொழிநுட்ப நிறுவனத்தின் பிரச்சினைகள் தொடர்பாக தான் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். மட்டக்களப்பு உயர் தொழிநுட்ப நிறுவன மாணவர்கள் பல வருடங்களாக நிரந்தர இடமோ வசதிகளோ இன்றி தொழிநுட்பக் கல்லூரியிலே பயின்று வந்தனர். தற்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினதும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் அவர்களினதும் அயராத முயற்சியினால் நிரந்தரமான தனியான இடமும் 30 இலட்சம் ரூபாய் செலவில் தற்காலிக வகுப்பறை கட்டிடங்களும் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏனைய மாவட்டங்களில் இருக்கின்ற உயர் தொழிநுட்ப நிறுவனங்களில் இருக்கின்ற வசதிகள் எதுவும் இதுவரை மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களுக்கு கிடைக்கவில்லை பல அரசியல் பிரமுகர்களிடம் மாணவர் ஒன்றியம் பல தடவை வேண்டுகோள் விடுத்தும் எவரும் உயர்தொழிநுட்ப நிறுவன மாணவர்களின்  கோரிக்கைகளுக்கு செவிமடுக்காது இருக்கும்போது கிழக்கு மாகாண கல்வி வளர்ச்சியில் அக்கறையோடு செயற்படும் கிழக்கு மாகாண முதலமைச்சர்  சிவநேசதுரை சந்திரகாந்தன் உயர் தொழிநுட்ப நிறுவனத்துக்கு நிரந்தர இடம் தற்காலிக கட்டிடம் கணணி உபகரணங்களை வழங்கி இருப்பதை ஒருபோதும் எமது மாணவர்கள் மறக்கக்கூடாது.  மறக்கவும்மாட்டார்கள். முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களை நாம் முதலமைச்சராகப் பெற்றிருப்பது. மட்டக்களப்புக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும் மாணவர்கள் பழைய மாணவர்கள் சார்பிலே உரையாற்றிய பழைய மாணவர் குறிப்பிட்டார்.
உயர் தொழிநுட்ப நிறுவனத்தை தனியான ஒரு இடத்திலே கொண்டு வருவதற்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்கள் அயராது பாடுபட்டவர் அடிக்கடி உயர் தொழிநுட்ப நிறுவனத்துக்கு வந்து மாணவர்களோடு கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகளை பெற்றுத் தரும் ஒருவர் அவரின் சேவைகளையும் மாணவர்கள் பாராட்டினர்.  இந்நிகழ்வில் முதலமைச்சரினால் பல கணணி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் முதலமைச்சரின் பிரத்தியக செயலாளர் ரமேஸ் மண்முனைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் மேரி கிரிஸ்ரினா  வள இணைப்பாளர் முத்துலட்சுமி விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment