தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதல்வருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இன்று (23.10.2011) மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடா, புதுக்குடியிருப்பு, ஆரையம்பதி போன்ற கிராமங்களுக்குச் சென்று மக்களைச்சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து வீதி, மின்சாரம் மற்றும் வீடு போன்ற முக்கிய தேவைகளை நிவர்தி செய்து தருவதாக கூறினார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும், மண்முனைப்பற்று பிரதேசசபை தவிசாளர் மேரி கிரிஸ்ரினா , மண்முனைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment