கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் மாகாண கலாச்சார பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் இலக்கிய விழா கடந்த 3நாளாக மட்டக்களப்பில் இடம்பெற்றுவருகின்றது. இவ் இலக்கிய விழாவில் இலக்கிய ஆய்வரங்கு, பண்பாட்டு பேரணி, இலக்கியவாதிகள் மற்றும் கவிஞர்களுக்கான முதலமைச்சர் விருது வழங்கும் நிகழ்வு போன்றவை இடம் பெற்று வருகின்றன. இறுதி நாளான இன்று முதலமைச்சர் விருது வழங்கும் நிகழ்வு மட்ஃமகாஜனக் கல்லூரியின் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அரங்கில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட 12கலைஞர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கி வைத்தார். அத்தோடு இலக்கியத்தில் தேர்ச்சி பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இவ் அரங்கில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.லை இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உரையாற்றும் போது கிழக்கு மாகாணத்திற்கென்று தனித்துவமான கலை, இலக்கியம்சங்கள் இயல்பாகவே அமையப் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் எமது பண்பாட்டுடன்கலந்து இருக்கின்ற கலை இலக்கிய அம்சங்களை பேணி பாதுகாப்பதற்கு இது போன்ற ஆக்கபூர்வமான நிகழ்வுகள் ஓர் ஆரம்பமாகும். கிழக்கு மாகாணத்திற்கே உரித்தான கலைஞர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் பண்பாட்டு கலை சார்ந்த விரும்பிகளையும் இவ்வாறான நிகழ்வின் ஊடாக நாம் முன் கொண்டுவந்து கௌரவிப்பது கிழக்கு மாகாணத்தில் ஒவ்வொருவருக்குமுரிய கடப்பாடாகும் .
பண்பாட்டுடன் கூடிய கலையம்சங்களை பேணி பாதுகாப்பதென்பது இலக்கிய படைப்பாளிகளின் பொறுப்பு மாத்திரம் அல்ல. அவ் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கலை, இலக்கிய துறையில் ஆர்வம் காட்டுகின்ற ஒவ்வொருவரினது தேவையாகும். காலத்தின் கட்டாய தேவை உணர்ந்தும் தமிழருக்கான இலக்கிய பாரம்பரியம், கலாச்சார விழுமியங்கள் என்பது தொன்றுதொட்டு வளர்த்தேடுக்கப்படடதொன்றகும் எமது மக்கள் அரும்பெரும் பொக்கிசமாக விளங்குகின்ற இக் கலையம்சங்களை தொடர்ந்தும் நாம் பேணி பாதுகாப்பதற்கு களம் அமைக்க வேண்டும். பாரம்பரிய உள்ளுர் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதனூடாக மறைந்த எமது கலையம்சங்களை இளம் தலைமுறையினருக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் கோடிட்டுக்காட்ட முடியும். எது எவ்வாறாயினும் கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்த சமாதான சூழலிலே கிழக்கு மாகாணத்திலே பிறந்த ஒவ்வொரு இலக்கிய துறையினருக்கும் எம்மாலான இயன்ற பணிகளை ஆற்றுவதற்கு நாம் முன்வர வேண்டும். எனவும் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரும், கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளரும் ஏ.எம்.ஈ.போல் த
கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரும், கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளரும் ஏ.எம்.ஈ.போல் த
மையில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், வலையக்கல்வி பணிப்பாளர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.பத்மராஜா, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் இலக்கிய திறனாய்வாளர்கள், பண்பாட்டலுவல் திணைக்கள பணிப்பாளர், ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டார்கள்.
குறிப்பு:- இலக்கிய விழாவில் இறுதி நாளான இன்று புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை கலையரங்கில் 3இனங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment