10/15/2011

இலங்கை - வியட்னாம் இடையே எட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை - வியட்னாம் இடையே எட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

  • அரசியல்
    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வியட்னாம் ஜனாதிபதி சந்தித்த போது
  • பாதுகாப்பு
  • நிதி
  • கல்வி
  • கைத்தொழில்
  • பெற்றோலியம்
  • தொழில்நுட்பம்
  • முதலீடு
இலங்கை மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளுக்கிடையி லான 8 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்றைய தினம் இரு நாட்டு ஜனாதிபதிகள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வியட்னாம் ஜனாதிபதி டிரோன்க் டன் சன்ங் (Truong Tan Sang) இற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற இரு தரப்பு சந்திப்பின் போது இவ் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
அவ்வைபவத்தில் அரசியல், நிதி, கைத்தொழில், கல்வி, பெற்றோலியம், தொழில்நுட்பம் பாதுகாப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு ஆகிய துறைகளி ற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக 08 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டது.
நேற்று (14) காலை ஜனாதிபதி செயலகத்தில் இரு நாட்டுத் தலைவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. அந்த வகையில் அவை பின்வருமாறு: இலங்கை மற் றும் வியட்னாம் வெளியுறவு அமைச்சர்க ளான ஜீ. எல். பீரிஸ் மற்றும் Doan Xuan Hung ஆகியோர் இரு நாட்டிற்கு மிடையிலான இருதரப்பு அரசியல் ஆலோசனை பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்டனர்.
இலங்கை நிதியமைச்சிற்கும், வியட்னாம் நிதி அமைச்சிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சர்வதேச நிதி ஒத்துழைப்பிற்கான சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம மற்றும் வியட் னாம் நிதி அமைச்சர் பேராசிரியர் (Vuong Dinh Hue) ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இலங்கைக்கும் வியட்னாமுக்குமிடை யிலான கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கான இயந்திர சாதனங்கள் மற்றும் உற்பத்தித் துறையுடன் தொடர்பு டைய புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கை சார்பாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் மற்றும் வியட்னாம் சார்பாக கைத்தொழில், வர்த்தக பிரதி அமைச்சர் Le Doung Quang  ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி மற்றும் பயிற்சி பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கை சார்பாக உயர் கல்வி பிரதி அமைச்சர் நந்தமித்திர ஏக்கநாயக்கவும் வியட்னாம் சார்பாக வெளி யுறவு பிரதி அமைச்சர் Doan Xuan Hung ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பெற்றோலியத்துறையின் புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கை சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீர துங்கவும், வியட்னாம் சார்பாக கைத் தொழில், வர்த்தக பிரதி அமைச்சர் Le Doan Xuan Hung சிung ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கை சார்பாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும், வியட்னாம் சார்பாக தேசிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் Nguyen Chi Vinh ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இரு நாடுகளுக்கு இடையிலான முதலீட்டு ஊக்குவிப்பு பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கை சார்பாக முதலீட்டுச் சபையின் தலைவர் எம். எம். சீ. பர்டினென்ஸ் மற்றும் வியட்னாம் சார்பாக வெளிநாட்டு முதலீட்டு முகவர் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் Do Nhat Hoang ஆகியோர் கைச் சாத்திட்டனர். இறுதியாக இரு நாடுகளுக்கும் இடையிலான TERM  எரிவாயு பற்றிய புரிந்துணர்வு உடன் படிக்கையில் இலங்கை சார்பாக பெற் றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.எச்.எஸ். ஜயவர்தனவும்ஜிV எரிபொருள் கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி Hoang Tai Minh Nguyet ஆகி யோரும் கைச்சாத்திட்டனர்.

0 commentaires :

Post a Comment