சிவில் பாதுகாப்பு குழு கூட்டமானது நாட்டின் சகல பாகங்களிலும் இடம்பெற்று வருகின்றது. ஒவ்வொரு மாவட்டங்களிலுமுள்ள சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மற்றும் கிராம மட்டங்களிலும் மேற்படி சிவில் பாதுகாப்பு குழு நியமிக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1வது சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி கூட்டமானது கிழக்கு மகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வுக்கு சிவில் பாதுகாப்புக்கு பொறுப்பான பாதுகாப்பு தரப்பினர், பாராளுமன்ற உறுப்பினாகள்;, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், துரைரெட்ணம், பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா, மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீத்தா பிரபாகரன், ஏனைய பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment