10/11/2011

தேசிய இளைஞர் பரிமாற்றுத்திட்டம். கொழும்பு – மட்டக்களப்பு.

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற திட்டத்தின் மூலம் கொழும்பு மாவட்டத்தில் இருந்து 50 இளைஞர் கழக தலைவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர். தொடர்ந்து 7நாட்கள் மட்டக்களப்பின் தமிழ் முஸ்லிம் இளைஞர்களுடனான பரிமாற்றுத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. தெரிவுசெய்யப்பட்ட ஆரயம்பதி பிரதேசத்தில் 50 இளைஞர்களின் வீடுகளில் அவர்களது கலை கலாச்சார வாழ்க்கை முறையுடன் பின்னி பிணைந்து இன ஒற்றுமைக்கு வழி வகுக்குமுகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வு தாழங்குடா   சமூக பராமரிப்பு  நிலைய கட்டடத்தில் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா தலமையில் இந் நிகழ்வு இடம்பெற்றன.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மற்றும் அதிதிகளாக பிரதி அமைச்சர் பசிர் சேகுதாவுத், கிழக்கு மாகாண இளைஞர் விவகார அமைச்சர் சுபைர், கொழும்பு மாவட்ட உதவி பணிப்பாளர் ஜகத் லியனகே, கொழும்பு நகர்புற தலைவர் சேனாரத்ன, மாவட்ட இளைஞர்சேவைகள் உத்தியோகஸ்த்தர்கள்ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment