இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை ஏற்பாடு செய்துள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமாகி தொடர்ந்து மூன்று நாட்கள் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. மேற்படி வர்த்தக கண்காட்சியினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பிரதி அமைச்சர்களான எம். எல ஏ. எம. ஹிஸ்புல்லாஹ், விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். இக் கண்காட்சியில் அதிநவீன முறையிலான பல உற்பத்திப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் உள்ளுர் உற்பத்திப் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment