ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
கடந்த 30ம் திகதி மாலை அமைச்சரது வாசஸ்தலத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இக்கலத்துரையாடலின் போது நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப் பட்டது. விரைவானதும் கெளரவமானதுமான அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் இங்கு வலியுறுத்தப்பட்டதுடன் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படாதிருக்கும் மக்களை விரைவில் மீள்குடியேற்றம் செய்வது தொடர்பிலும் புனர்வாழ்வு நிலையங்களில் எஞ்சி இருக்கும் இளைஞர் யுவதிகளை விரைவில் விடுவிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப் பட்டது.
அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப் பட்டிருப்பவர்களை கூடிய விரைவாக விசாரணைகள் செய்வது அவர்களை விடுதலை செய்வது குறித்தும் அவதானஞ் செலுத்தப்பட்டது.
மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இங்கு கலந்துரையாடப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

0 commentaires :
Post a Comment