10/03/2011

மட்டக்களப்பில் சுற்றுலா தின கொண்டாட்டம்.

உலக சுற்றுலா தினம் மட்டக்களப்பில் வெகு விமர்சையாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் கிழக்கு மாகாண சுற்றுலா துறை அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலமையில் இடம்பெற்றது.
கல்லடி கடற்கரையிலே இதன் ஆரம்ப நிகழ்வுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படும் இதன்போதுகலாச்சாரம் மற்றும் உல்லாசத்துறை சார்ந்த நிகழ்வுகளும் இடம்பெறும். இன்று காலை ஆரம்ப நிகழ்வுகளாக மரதன் ஓட்டமும் நீச்சலும் மற்றும் தோணி ஓட்டம் ஆகிய இரண்டு நிகழ்வுகளும் முதலமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகர மேயர், மற்றும் விளையாட்டு உத்தியோகஸ்த்தர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment