நடந்து முடிந்த 23 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தலிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
23 உள்ளூராட்சி சபைகளில் 21 உள்ளூராட்சி சபைகளை ஐ. ம. சு. முன்னணி வெற்றியீட்டி இருக்கின்றது. அதேநேரம் ஆளும் ஐ. ம. சு. முன்னணி அரசுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மாநகர சபையை வெற்றி பெற்றுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாநகர சபை தவிர்ந்த சகல உள்ளூராட்சி சபைகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது.
இந்த 23 உள்ளூராட்சி சபைகளுக்கும் 420 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக நேற்று முன்தினம் (8 ஆம் திகதி) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும் வாக்களிப்பு நடைபெற்றது. இத் தேர்தலில் 6488 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இத் தேர்தலில் ஐ. ம. சு. முன்னணி 524996 வாக்குகளைப் பெற்று 245 உறுப்பினர்களையும், ஐ. தே. க. 349300 வாக்குகளைப் பெற்று 131 உறுப்பினர்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 38023 வாக்குகளைப் பெற்று 15 உறுப்பினர்களையும், ஜனநாயக மக்கள் முன்னணி 29334 வாக்குகளைப் பெற்று 8 உறுப்பினர்களையும், ஜே. வி. பி. 19027 வாக்குகளைப் பெற்று 6 பிரதிநிதிகளையும், அகில இலங்கை தமிழரசுக் கட்சி 9911 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும், ஜனநாயக ஐக்கிய முன்னணி 7830 வாக்கு களை பெற்று இரு உறுப்பினர்களையும் பெற்றுள்ளது. இதேவேளை லங்கா சமசமாஜக் கட்சி இலங்கை ஜனநாயக ஐக்கிய முன்னணி மற்றும் ஏழு சுயேச்சை குழுக்கள் என்பனவும் தலா ஒரு ஆசனப்படி வென்றெடுத்துள்ளன.
இதேவேளை பதுளை மாநகர சபையில் மலையக மக்கள் முன்னணியும், இரத்தினபுரி மாநகர சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ¤ம் தனித்து போட்டியிட்டன. ஆயினும் அக் கட்சிகள் ஆசனங்கள் எதனையும் கைப்பற்றவில்லை. மாறாக இரத்தினபுரி மாநகர சபைக்குப் போட்டி யிட்ட இ. தொ. கா. 623 வாக்குகளையும், பதுளை மாநகர சபைக்குப் போட்டியிட்ட ம. ம. மு. 293 வாக்குகளையும் பெற்றன.
இதேநேரம் காலி, நுவரெலியா ஆகிய மாநகர சபைகளிலும், குண்டசாலை பிரதேச சபையிலும், கொலன்னாவ நகர சபையிலும் ஸ்ரீல. மு. கா. தனித்து போட்டியிட்ட போதிலும் அக் கட்சி சார்பில் இந்த உள்ளூராட்சி சபைகளில் எந்தவொரு உறுப்பினரும் வெற்றி பெறவில்லை.
நுவரெலியா மாநகர சபைக்கான தேர்தலில் 187 வாக்குகளையும், காலி மாநகர சபைக்கான தேர்தலில் 903 வாக்குகளையும், குண்டசாலை பிரதேச சபைக்கான தேர்தலில் 1197 வாக்குகளையும், கொலன்னாவ நகர சபைக்கான தேர்தலில் 565 வாக்குகளையும் தான் அக் கட்சியால் பெற்றுக் கொள்ள முடிந்தது.
மேலும் கண்டி மாநகர சபையிலும், நீர்கொழும்பு மாநகர சபையிலும் தலா ஒவ்வொரு ஆசனங்களையும் கொழும்பு மாநகர சபையில் இரு ஆசனங்களுமாக நான்கு ஆசனங்களையும் வெற்றி பெற்றுள்ளது.
13 மாவட்டங்களிலுள்ள 17 மாநகர சபைகளுக்கும், 05 பிரதேச சபைகளுக்கும், ஒரு மாநகர சபைக்குமே இத்தேர்தல் நடைபெற்றது. இவற்றில் கொழும்பு மாநகர சபை தவிர்ந்த 15 மாநகர சபைகளை ஐ.ம.சு. முன்னணியும், ஒரு மாநகர சபையை ஸ்ரீல.மு.கா.வும் வெற்றி பெற்றிருக்கின்றது.
இத்தேர்தலில் வாக்களிப்பதற்கு 1589622 பேர் தகுதி பெற்றிருந்தனர். இவர்கள் வாக்களிக்கவென 1167 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 2010 ம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் இத் தேர்தல் நடாத்தப்பட்டது. இத் தேர்தலில் 26 அரசியல் கட்சிகளும், 104 சுயேச்சைகளும் போட்டியிட்டன.
இந்த உள்ளூராட்சி சபைகளுக்கு 55 – 60 சதவீதம் வரை வாக்களிப்பு இடம் பெற்றதாக பெப்ரல் அமைப்பின் நிறை வேற்று பணிப்பாளர் ரோகண ரொட்ரிகோ நேற்று முன்தினம் மாலையில் தெரிவித்தார்.
வாக்களிப்பானது தேர்தல் தினத்தன்று அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடை பெற்றது என்றாலும் வாக்களிப்பு தின மான சனிக்கிழமை பிற்பகல் முல்லேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்ததுடன் 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது மிகுந்த கவலைக்குரிய சம்பவம் என்றும் அவர் கூறினார்.
இச் சம்பவத்தில் முன்னாள் எம்.பியும், ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரப் பணிப்பாளர் நாயகமுமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உயிரிழந்துள்ளார். அதேநேரம் ஐ.ம.சு. முன்னணியின் கொலன்னாவ தொகுதி அமைப்பாளரும், எம்.பியுமான துமிந்த சில்வா படுகாய மடைந்து ஸ்ரீ ஜயவர்தனபுர ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இச் சம்பவத்தையடுத்து முல்லேரியா பிரதேசத்தில் மாலை 6 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாகப் பிறப்பிக்கப்பட்ட தாகவும், விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
முல்லேரியா துப்பாக்கி பிரயோகச் சம்பவத்தைத் தவிர வேறு எங்கும் தேர்தல் தினத்தன்று வன்முறைகள் இடம்பெறவில்லை என தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன கூறினார்.
இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினமிரவு 10 மணி முதல் வெளியாக ஆரம்பமானது. என்றாலும் நேற்று காலை 6.35 மணியாகும் போது சகல உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் முடிவுகளை தேர்தல் செயலகம் வெளியிட்டது.
இந்த உள்ளூராட்சி மன்றங்களில் கொட்டிகாவத்தை - முல்லேரியா பிரதேச சபையையே ஐ.ம.சு.மு. அதி கூடிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் படி 25729 மேலதிக வாக்குகளால் கொட்டிகாவத்தை - முல்லேரியா பிரதேச சபையை வெற்றி பெற்ற ஐ.ம.சு.மு. மொரட் டுவை மாநகர சபையை 20 ஆயிரத்து 62 மேலதிக வாக்குகளாலும், குண்டசாலை பிரதேச சபையை 17554 மேலதிக வாக்கு களாலும், கம்பஹா மாநகர சபையை 16201 மேலதிக வாக்குகளாலும், ஸ்ரீஜய வர்தனபுர - கோட்டை மாநகர சபையை 15893 மேலதிக வாக்குகளாலும், நீர்கொழும்பு மாநகர சபையை 12520 மேலதிக வாக்குகளாலும் ஐ.ம.சு.மு. வெற்றி பெற்றது.
என்றாலும் நுவரெலிய மாநகர சபையை 494 மேலதிக வாக்குகளாலும், கொலன் னாவை நகர சபையை 636 மேலதிக வாக்குகளாலும் தான் ஐ.ம.சு.மு. வெற்றி பெற்றது. கொழும்பு மாநகர சபையை 24831 மேலதிக வாக்குகளால் ஐ.தே.க. வெற்றி பெற்றுள்ளது.
இதேவேளை 58 வருடங்களாக ஐ.தே.க. வசமிருந்த கண்டி மாநகர சபையை இப்போது ஐ.ம.சு.மு. வெற்றி பெற்றுள்ளது. தெஹிவளை - கல்கிஸ்ஸை மாநகர சபையும் ஆளும் கட்சி வசமாகியுள்ளது.
இது இவ்வாறிருக்க, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள ஹம்பாந்தோட்டை பிரதேச சபையிலும், சூரியவெவ பிரதேச சபையிலும் தலா ஒரு ஆசனத்தையே ஐ. தே. க. பெற்றுள்ளது.
இதேநேரம் இந்த 23 உள்ளூராட்சி சபைகளிலும் மக்கள் விடுதலை முன்னணி ஆறு ஆசனங்களையே பெற்றிருக்கின்றது. அதுவும் தலா ஒரு ஆசனமே கிடைத்துள்ளது. இத் தேர்தலில் ஜே.வி.பி. பாரிய பின்ன டைவை சந்தித்துள்ளது. நாட்டு மக்கள் ஐ.தே.க. வினதும், ஜே.வி.பி. யினதும் கொள்கைகளையும், வேலைத் திட்டங்களை யும் நிராகரித்திருப்பதே இத் தேர்தல் முடிவும் வெளிப்படுத்துவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

0 commentaires :
Post a Comment