2012 ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த செலவினம் 128,428,44,71000 ரூபா (நூற்றியிருப்பத்தெட்டாயிரத்து நானூற்றியிருபத்தெட்டு கோடி நாற்பத்து நான்கு இலட்சத்து எழுபத்தோராயிரம் ரூபா) என மதிப்பிடப்பட்டுள்ளது.
தேவையான நிதியை திரட்டுகையில் நூற்றிப்பதினையாயிரம் கோடியை விட அதிகரிக்கக் கூடாது என நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று பிரதமர் டி. எம். ஜயரத்தினவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. வழமையான சபை நடவடிக்கைகளின் பின்னர் வாய்மொழி விடைக்கான கேள்வி நேரமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான என். டென்சில் பர்னாண்டோ, எச். ஜீ. பி. நெல்சன், மேர்வின் ஜே. குரே ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து பிரதமர் தி. மு. ஜயரட்ன நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்தார். இதன்படி புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சிற்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அமைச்சிற்கு (229, 943,000,000) இரண்டு இலட்சத்து இருபத்து ஒன்பதாயிரத்து தொளாயிரத்து நாற்பத்து மூன்று மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டு வரும் தொகை 72,051,804,000 ரூபாவும் மூலதனச் செலவினம் 52,164,370,000 ரூபாவும் அடங்கும்.
நிதி திட்டமிடல் அமைச்சிற்கு 124,216,174,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டுவரும் செலவினம் 72,051,804,000 ரூபா எனவும் மூலதனச் செலவினம் 52,164,370,000 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு 104,571,330,000 ரூபாவும் பொது நிர்வாக அமைச்சிற்கு 113,623,815,000 ரூபாவும், சுகாதார அமைச்சிற்கு 73,999,998,000 ஜனாதிபதி அவர்களுக்கு 6,161,700,000 ரூபாவும் கல்வி அமைச்சிற்கு 33,266,010,000 ரூபாவும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சிற்கு 129,773,139,000 ரூபாவும் உயர் கல்வி அமைச்சிற்கு 24,470,000,000 ரூபாவும், ஊடக அமைச்சிற்கு 2,105,000,000 ரூபாவும் புனர்வாழ்வு சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சிற்கு 4,322,000,000 ரூபாவும் மீள்குடியேற்ற அமைச்சிற்கு 481,605,000 ரூபாவும் நெடுஞ்சாலைகள் அமைச்சிற்கு 144,567,630,000 ரூபாவும், ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், உச்சநீதிமன்ற நீதிபதிகள், சுயாதீன ஆணைக்குழுக்கள், லஞ்ச ஊழல் ஆணைக்குழு, சட்ட மா அதிபர் திணைக்களம், பாராளுமன்றம், தேர்தல் திணைக்களம், அடங்கலான அரச நிறுவனங்களுக்கு 11,718,273,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முக்கிய செலவினங்கள் வருமாறு:

0 commentaires :
Post a Comment