10/11/2011

இலவசக் கல்வியில் நிபுணத்துவம் பெற்ற சுமார் 10,000 டொக்டர்கள் வெளிநாடுகளில் சொகுசு வாழ்வு டொக்டர்கள் பற்றாக்குறையால் 47 ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டுள்ளன

இலங்கையில் இலவச கல்வி கற்று மருத்துவத்துறையில் நிபுணத்துவம் பெற்ற சுமார் 10 ஆயிரம் டொக்டர்கள் வெளிநாடுகளில் கடமையாற்றுவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் டொக்டர்கள் பற்றாக்குறை காரணமாக 47 அரசாங்க ஆஸ்பத்திரிகள் இயங்க முடியாத நிலையில் மூடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டில் அமைதி, சமாதானம் ஏற்படுத்தப்பட் டிருப்பதால் வெளிநாடுகளில் பணி புரியும் டொக்டர்கள் தாயகம் திரும்பி மக்களுக்குச் சேவையாற்ற முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை யில் கடமையாற்றி ஓய்வு பெறும் டொக்டர்களின் சேவைகளைப் பாராட்டி, கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள் ளார்.
இந் நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தற்போது நாட்டிலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளில் சுமார் 16 ஆயிரம் டொக்டர்கள் கடமையாற்றுகின்றார்கள். ஆனாலும் டொக்டர்கள் பற்றாக்குறை பெரிதும் நிலவுகின்றது. இருப்பினும் இலங்கையைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் டொக்டர்கள் வெளிநாடுகளிலுள்ள ஆஸ்பத்திரிகளில் கடமையாற்றுகி ன்றார்கள்.
இவர்கள் இந்நாட்டு மக்களின் நிதி மூலம் கல்வி கற்று டொக்டர்களானவர்கள். பயங்கரவாத நிலைமை உள்ளிட்ட வெவ்வேறு காரணங்களின் நிமித்தமே இவர்கள் நாட்டிலிருந்து வெளியாகினர்.
இவர்களில் மருத்துவப் பயிற்சிக்காக சென்று நாடு திரும்பாது தங்கி இருப்பவர்களும் உள்ளனர். இந்த வகையில் இலங்கையில் இலவசக் கல்வி பெற்று டொக்டர்களான சுமார் 2500 பேர் பிரித்தானியாவிலும், சுமார் 3500 பேர் அவுஸ்திரே லியாவிலும், சுமார் 1500 பேர் ஐக்கிய அமெரிக்கா விலும் பணி புரிகின்றார் கள். இவர்களில் பெரும் பகுதியினர் நாடு திரும்பு வார்களாயின் இங்கு டொக்டர்கள் பற்றாக்குறை பெரிதும் குறைந்துவிடும்.
ஆகவே தங்கள் தாயக மக்களுக்கு சேவையாற்றுவதற்காக வெளிநாடுகளில் கடமை புரியும் டொக்டர்கள் நாடு திரும்ப முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

0 commentaires :

Post a Comment