10/31/2011
| 0 commentaires |
தமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் சிக்குண்ட கிழக்கு மாகாணம். பகுதி - 2
கருணாவோ அல்லது பிள்ளையானோ புதலில் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழ் இயக்கங்களின் தோற்றத்திலிருந்து இன்றுவரை பலர் அல்லது பல இயக்கங்கள் புலிகளுக்கு எதிராக செயற்பட்டனர்.
பல தமிழ் இயக்கங்கள் தோற்றம்பெற்றபோதிலும் அவை நிலைத்து புலிகள் இயக்கத்தைப்போல் வலுப்பெற முடியாமைக்கு பல காரணங்கள் இருக்கின்ற போதிலும் தமிழ் இயக்கங்களிடையே இருந்த போட்டியும் முக்கிய காரணமாகும். மாற்றுக் கருத்துடையோரை "மண்டையில் போடும் "கலாசாரத்திலே மாற்றுக் கருத்துள்ள பல தமிழ் தலைவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன.
இருந்தபோதும் அன்று தொட்டு இன்றுவரை பல தமிழ் தலைமைகள் புலிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் வடக்கைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகள் இயக்கத்தை உலகமே வியக்கும்படி உலகையே புலிகள் பக்கம் திரும்பிப் பார்க வைத்த வீரச் சமர்கள் பல புரிந்து பல வெற்றிகளை பெற்றுத்தந்த பெருமை கிழக்கு மாகாண போராளிகளையே சாரும். வெற்றிச் சமர்களில் சரித்திரம் படைத்த கிழக்குப் போராளிகளை வழிநடாத்தியவர் கருணா அம்மான்.
வெற்றிச் சமர்கள் பல புரிந்து புலிகளை எவராலும் அசைக்க முடியாது எனும் நிலைக்கு கொண்டு சென்ற கிழக்கு போராளிகளும் அவர்களை வழிநடாத்திய கருணாவும் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறியதன் காரணமாகத்தான் இன்று புலிகள் அழித்தொழிக்கப்பட்டனர் என்பது உண்மைதான்.
புலிகள் அமைப்பிலே கிழக்குப் போராளிகள் வெற்றிச் சமர்கள் பல புரிந்து சரித்திர வெற்றிகள் பலவற்றைக் கண்டவர்கள். விடுதலைப்புலிகளின் படைப்பிரிவுகளிலே அசைக்க முடியாத படைபலத்தின் தூண்களாக களமாடியவர்கள் கிழக்கு மாகாணப் போராளிகள். புலிகள் இயக்கத்தின் படைப்பிரிவுகளின் அசைக்க முடியாத தூண்களான கிழக்குப் போராளிகளை புலிகள் இயக்கம் இழந்தமை புலிகளின் அழிவுக்கு காரணமாகிவிட்டது.
புலிகள் இயக்கம் உலகமே வியக்கும் அளவுக்கு ஒரு விடுதலை இராணுவமாக கட்டி எழுப்பப்பட்டிருந்தாலும். புலிகளின் உயர் தலைமைப்பீடங்கள் அவ்வப்போது பல வரலாற்றுத் தவறுகளை செய்திருப்பதுடன். சில விடயங்களுக்கு தீர்வு காண்கின்ற வேளைகளிலே தமது இயக்கத்தின் எதிர்காலம் பற்றி சிந்தித்து முடிவெடுக்க தவறிவிட்டனர்.
அதன் ஒரு அங்கம்தான் கிழக்கு போராளிகள் புலிகள் இயக்கத்தைவிட்டு பிரிந்து சென்றமை. அன்று கருணாவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை. காலங்காலமாக கிழக்கு மக்கள் தமிழ் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு வந்தமை மறுக்க முடியாத உண்மை. கருணா பிரிந்து வருவதற்கு முன்னர் கிழக்கு மக்கள் ஏமாற்றப்பட்டு வருவதை பலரும் உணர்திருந்தபோதும் அவற்றை வெளிப்படுத்தத் தயங்கினர்.
மாற்றுக் கருத்துள்ள பலர் அழித்தொழிக்கப்பட்ட வரலாறுகள் அவர்களின் உணர்வுகளை சிறைப்படுத்தியிருந்தன. எது எப்படி இருப்பினும் கிழக்கு மக்கள் கிழக்கின் உரிமைகள், கிழக்கு மக்கள் ஏமாற்றப்படுகின்ற துரோகங்களை சுட்டிக்காட்டிய போதெல்லாம் மட்டக்களப்பான் பிரதேசவாதம் பேசுகின்றான் என்றும் துரோகி என்றும் பட்டம் சூட்டிய வரலாறுகள் பலவுண்டு.
கிழக்குப் போராளிகள் பிரிந்து வந்தபோது கிழக்குக்கான சுயநிரணயமும் ,கிழக்குக்கான தலைமைத்துவத்தின் தேவையும், கிழக்கு மாகாணத்துக்கு தனித்துவமான கட்சியின் அவசியமும் உணரப்பட்டது. அதன் வெளிப்பாடுதான் தமிழ் மக்கள் விடுதபை் புலிகள் கட்சியும் கிழக்கு மாகாணசபை உருவாக்கமும், கிழக்கின் துரித அபிவிருத்தியும்.
அன்று கிழக்குப் போராளிகள் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்தபோது புலிகளின் தலைமைப்பீடம் சரியான தீர்க்க தரிசனமான முடிவுகளை எடுக்கவில்லை. கருணாவால் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளை காண முற்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து கருணாவை பிடிப்பதிலும் தண்டனை வழங்குவதிலுமே அதிக கவனம் செலுத்தினர். அன்று அவர்கள் கனவிலும்கூட நினைத்துப் பார்க்கவில்லை கிழக்குப் போராளிகள் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்பதனை.
கிழக்குப் போராளிகள் கருணாவினாலேயே வழி நடத்தப்பட்டனர். அவர்கள் கருணாவின் கட்டளைகளின் பெயரிலே செயற்பட்டு வந்தவர்கள். கருணா கிழக்குப் போராளிகள் புலிகளிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்றதும் கருணாவின் பின்னால் வந்துவிட்டனர். அவர்கள் அப்போது உண்மைகளை, நிஜங்களை உணர்ந்து கொண்டனர்.
கிழக்குப் போராளிகள் பிரிந்து வரும் கால கட்டத்தில்தான் வீட்டுக்கொரு போராளி எனும் திட்டத்தின் மூலம் கிழக்கு மக்கள் புலிகளுக்கு எதிராக குரல்கொடுக்க ஆரம்பித்தனர். அந்தக்கால கட்டத்தில்தான் கிழக்கு மக்கள் தாம் ஏதோ ஒரு வகையில் ஏமாற்றப்பட்டு வருகின்றோம் என்பதனை உணர்ந்துகொள்ள ஆரம்பித்தனர்.
கிழக்குப் போராளிகளின் பிரிவிற்கான காரணத்தையும் அதற்கான தீர்வுகள் பற்றியும் புலிகளின் தலைமைப்பீடம் ஆராய்ந்திருக்க வேண்டும். அன்று அவர்கள் எடுத்த திடிர் முடிவுகளின் பிரதிபலிப்பு துரித கதியில் தாங்களே அழிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
கிழக்குப் போராளிகள் பிரிந்து வந்தபோது கிழக்குப் போராளிகளின் பிரிவைத் தடுப்பதனை விடுத்து சகோதரப் படுகொலைகளை நோக்கி புலிகள் இயக்கம் சென்றது. அதன் ஒரு கட்டமாக வெருகலில் பல நூற்றுக்கணக்கான அப்பாவி கிழக்குப் போராளிகள் கொன்று குவிக்கப்பட்ட வெருகல் படுகொலை கிழக்கு மக்களின் சரித்திரத்தில் மாறாத வடுக்கள். இவ் வெருகல் படுகொலையில் பல பெண் போராளிகள் நிராயுதபாணியாக சொல்லமுடியாத சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். பல களமாடி வெற்றிச் சமர்களை பெற்று வீர சரித்திரங்களை படைத்தமைக்காக விடுதலைப்புலிகள் கொடுக்கும் கைமாறு இதுதானா? விடுதலைப் புலிகளின் சகோதரப் படுகொலைகள் கிழக்குப் போராளிகள் என்று மட்டுமல்லாமல் கிழக்கு புத்திஜீவிகள் நோக்கியும் புலிகளின் துப்பாக்கிகள் திரும்பின. பல புத்திஜீவிகள் புலிகளின் துப்பாக்கி தோட்டாக்களுக்கு இரையாகினர்.
கிழக்குப் போராளிகளும், கிழக்குப் புத்திஜீவிகளும் படுகொலை செய்யப்படும்போது புலிகளின் அரசியல் சக்தியாக விழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், வெளிநாடுகளிலே இருந்து தமிழன், தமிழீழம் என்றெல்லாம் வீர வசனம்பேசி வீராப்பு காட்டிக் கொண்டிருப்பவர்களும் மெளனம் சாதித்தமை வேதனைக்குரிய விடயமே. இவர்கள் மெளனம் சாதித்தது சாவது கிழக்கு தமிழன்தானே என்பதனாலா?
அப்போதைய கால கட்டத்தில் கிழக்கிலே அரசியல் நீரோட்டத்தின் மூலமே கிழக்கு மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்க முடியும், கிழக்கில் ஒரு அரசியல் சக்தி உருவாக்கப்படுவதன் மூலமே கிழக்கு மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவும், கிழக்கின் சுயநிர்ணயத்துக்கான ஒரு அரசியல் சக்தியின் தேவைப்பாடு உணரப்பட்டது.
அதன் பிரதிபலிப்பாக தற்போது கிழக்கு மாகாண சபையையும், மட்டக்களப்பின் பல உள்ளுராட்சி சபைகளையும் ஆட்சி செய்தகொண்டிருக்கின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பல சவால்களுக்கும், பெறுமதிமிக்க உயிர்பலிகளுக்கு மத்தியிலும் தோற்றம் பெற்றது.
கிழக்கிலே ஒரு கட்சி தோற்றம் பெறுவதனையும் கிழக்கிலே ஒரு தலைமைத்துவம் தோற்றம் பெறுவதனையும் சகித்துக் கொள்ள முடியாத தீய சக்திகள் பல சதித் திட்டங்களை அவ்வப்போது மேற்கொண்டனர். அவ்வாறான சதித்திட்டங்களிலே கிழக்கு மக்களால் எதிர்பார்க்கப்படாத துயரம் நிறைந்த ஒரு நிகழ்வு இடம் பெறுகின்றது.
தொடரும்....
| 0 commentaires |
புலிகளுக்குள் குத்து வெட்டு பாரிஸில் சம்பவம்
மாவீரர் நிகழ்வு வியாபாரம்தொடர்பாக புலிகளின் குழுக்களுக்கிடையில்சர்வதேசரீதியாக உருவாகி வரும் பங்கு பிரச்சனைகள் பூதாகரமாக உருவெடுத்து வருகின்றன அதன் விளைவாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆயுததாரிகள் நிகழ்த்திய வாள்வீச்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய பிரதிநிதியான திரு.பருதி அவர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகத்தை விட்டு வெளியில் வந்த பொழுது, வெளியில் காத்திருந்த முகமூடியணிந்த ஆயுதபாணிகளால் கத்திகள், வாட்கள் சகிதம் இவர் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த திரு.பருதி அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
10/28/2011
| 0 commentaires |
தமிழீம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் சிக்குண்ட கிழக்கு மாகாணம் பகுதி - 1
shanthru
--
www.shanthru.blogspot.com
கிழக்கு மாகாணம் பல வரலாற்றுப் பின்னணியினைக் கொண்ட சகல வழங்களும் நிறைந்த ஒரு அழகிய பிரதேசம். தொன்று தொட்டு மூவின மக்களும் வாழ்ந்து வரும் இப்பிரதேசம் கடந்த முப்பது வருடமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கி ன்றது.
நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக கிழக்கு மாகாணமே வெகுவாகப் பாதிக்கப்பட்டது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பல விதங்களிலும் கிழக்குப் பிரதேசம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அதன் பிரதிபலிப்புக்கள் இன்று கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முற்படும்போது பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலே பல களமாடி வெற்றிச் சமர்களைப் படைத்தவர்கள் கிழக்கு மாகாணப் போராளிகளே. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு போராளிகளே. தமிழீழம் கிடைக்கும் என்ற கனவோடு வீர மரணமடைந்தவர்களில் அதிகமானவர்கள் கிழக்குப் போராளிகளே.
தமிழீழம் கிடைக்கும் என்ற கனவோடு உயிர் நீத்த அந்தத் போராளிகளின் குடும்பங்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றனர். தமிழீழம் தமிழீழம் என்று இளைஞர், யுவதிகளை உசுப்பேற்றி வீர வசனம் பேசியவர்கள் அந்தக் குடும்பங்களுக்கு என்ன செய்தனர்.
யுத்தத்தில் பங்குகொண்ட பல கிழக்குப் போராளிகள் தமது அவயவங்களை இழந்து இன்னொருவரிடம் கையேந்தும் நிலையில் இருக்கின்றனர். எத்தனையோ இளம் சிறார்கள் தாய் தந்தையரை சொந்தங்களை இழந்து ஒரு நேர உணவிற்குகூட உணவின்றி அனாதைகளாக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்திலே பல சிறுவர்கள் பாடசாலை செல்ல வேண்டிய வயதில் உடலை வருத்தி கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் எதிர்காலம் என்ன என்பதனை நாம் சிந்திக்க வேண்டும். இவ்வாறு சென்றால் எமது மக்களின் கல்விநிலை எதிர்காலம் பற்றி எல்லாம் நாம் சிந்திக்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்தில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருக்கின்றனர். இது எதனால ஏற்பட்டது கடந்தகால தமிழ் தலைவர்கள் அடைய முடியாத இலக்கு நோக்கிய தமது பயணத்தில் மக்களையும் இணைத்துக் கொள்ள முற்பட்டதன் விழைவுதான் இந்த அவல நிலை.
இன்று துரிதமாக அபிவிருத்தி கண்டுவரும் கிழக்குப் பிரதேசத்தின் அபிவிருத்தியிலே விதவைகள் பிரச்சினை பல சாவால்கள் நிறைந்த ஒன்றாகக் காணப்படுகின்றது. இந்த விதவைகள் தமது குடும்ப சுமையை பல கஸ்ரங்களின் மத்தியில் சுமந்து வருகின்றனர். இவர்கள் சந்திக்கின்ற அவலங்கள் எண்ணிலடங்காதவை. சமூக ரீதியான பிரச்சினைகள் ஒரு புறமிருக்க பொருளாதாரப் பிரச்சினைகள் பல பிரச்சினைகளை தோற்றுவித்திருக்கின்றன.
இந்த விதவைகளில் அதிகமானவர்கள் இளம் பெண்கள் என்பது வருந்தத்தக்க விடயம். யுத்தம் இடம் பெற்றுக் கொண்டிருந்த வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கிழக்கிலே கிராமங்கள் தோறும் வீட்டுக்கொரு போராளி எனும் திட்டத்தின் கீழ் பல இளைஞர், யுவதிகள் வலுக் கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
வீட்டுக்கொரு போராளி திட்டத்தின் கீழ் பல இளைஞர், யுவதிகள் தாம் படித்துக் கொண்டிருந்த வேளையில் புலிகள் இயக்கத்தில் கட்டாயத்தின் பேரில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பல்கலைக்கழக மாணவர்களும் கட்டாயத்தின் பேரில் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் கல்வியை அன்று இழந்தனர். இன்று அவர்களில் பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் இருக்கின்றனர்.
அன்று புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பின் வடுக்கள் இன்று பல சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவித்திருக்கின்றது. புலிகளின் கட்டாய ஆட்ரே்ப்பின் காரணமாக மிகவும் சிறிய வயதில் தமது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர். அதன் பிரதிபலிப்பே இன்று மட்டக்களப்பில் இளம் விதவைகள் அதிகரித்திருப்பதற்குக் காரணமாகும். இவ்வாறு யுத்தம் விட்டுச் சென்ற வடுக்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
யுத்தம் முடிவிற்கு வந்திருக்கின்றது. கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாணசபை உருவாக்கத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்திலே பல சவால்களுக்கும் மத்தியில் சகல துறைகளும் அபிவிரத்தி கண்டு வருவதனை எவராலும் மறுக்க முடியாது. கிழக்கு மாகாணம் அபிவிருத்தி கண்டு வருவதனை சகித்துக் கொள்ள முடியாத பலர் கிழக்கு மாகாண மக்களை குழப்பி கிழக்கின் அபிவிருத்தியை தடைசெய்ய எத்தணித்துக் கொண்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
கிழக்கு மாகாண மக்கள் அன்று தொட்டு இன்றுவரை ஏமாற்றப்பட்டு வந்த சரித்திரங்களை நாம் மறந்துவிடக்கூடாது. இனிமேலும் எமது சமூகம் ஏமாறும் மக்களாக இருக்க முடியாது. வெறுமனே நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களையும், தமிழ் அரசியல்வாதிகளின் இருப்புக்கான உணர்ச்சி வார்த்தைகளின் உண்மைத் தன்மையினையும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழீழம் எனும் அடைய முடியாத இலக்கு நோக்கிய பயணத்தில் நாம் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பயணம் செய்திருக்கின்றோம் தமிழீழம் நோக்கிய அறுபது ஆண்டுகளுக்கு மேலான பயணத்தில் எமக்கு கிடைத்த பலன் என்ன? பல இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை இழந்திருக்கின்றோம். எமது உடமைகளை இழந்திருக்கின்றோம், எமது தேசம் சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கி ன்றது.
தமிழீழம், தமிழனுக்கென்றொரு நாடு கிடைத்தால் ஒவ்வொரு தமிழனும் சந்தோசப்படுவான். சந்தோசப்படவில்லை என்றால் அவன் உண்மையான தமிழனாக இருக்க முடியாது. ஆனாலும் இலங்கையைப் பொறுத்தவரை தமிழீழம் சாத்தியமா என்பதனைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அன்று உணர்ச்சி வார்த்தைகளைக்கூறி எமது மக்களை உசுப்பேற்றிய எமது தலைவர்கள் தமிழீழம் சாத்தியமா என்பதனை சிந்தித்திருந்தால் இத்தனை அழிவுகளையும் அவலங்களையும் எமது தமிழ் சமூகம் சிந்தித்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
இன்றைய நிலையில் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சாத்தியமான தீர்வுத் திட்டங்களை நோக்கிய பயணத்தில் தமிழ் தலைவர்கள் தமது பயணத்தை நகர்த்தி மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டும் அதனை விடுத்து தமது இருப்பினை தக்க வைத்துக் கொள்வதற்காக உணர்ச்சி வார்த்தைகளை மக்கள் மத்தியில் வதைப்பதனை விடுத்து மக்கள் நலனில் அக்கறையுடன் சாத்தியமான தீர்வுத் திட்டங்கள் நோக்கி பயணிக்க வேண்டும்.
இதுவரை தமிழ் மக்கள் சந்தித்த அவலங்களும் அழிவுகளும் போதாதென்று சில சக்திகள் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களின் அவலங்களில் குளிர் காய நினைக்கும் சில சக்திகளும் மீண்டும் தமிழர்களை உசுப்பேற்றி அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்ல நினைக்கின்றனர்.
சிறிய, சிறிய பிரச்சினைகளை எல்லாம் பூதாகரமான பிரச்சினைகளாக்கி உண்ணாவிரதம் , ஆர்ப்பாட்டம், கடையடைப்பு என்று தமிழர்களை உசுப்பேற்றி மீண்டும் தமிழர்களை அழிக்க நினைக்கின்றனர். தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருந்தால்தான் அப் பிரச்சினைகளைச் சொல்லிச் சொல்லியே அரசியல் நடாத்த நினைக்கும் தமிழ் தலைமைகள் மக்கள் நலனைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு இணப்பு தொடர்பாக பேசி வருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு இணைப்பின் சாத்தியங்கள் பற்றி ஆராய வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலே பல பிரச்சினைகள் இருப்பதனையும் வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமான விடயமல்ல என்பதனையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
வடக்கு, கிழக்கு இணைப்பினால் தமிழீழம் கிடைத்துவிடுமா? வடக்கு, கிழக்கு பிரிந்து இருப்பதனால் என்ன? இன்று கிழக்கு பிரிந்து இருப்பதனால்தான் மாகாணசபை முறைமையினால் யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட கிழக்கு பிரதேசம் துரித வழர்ச்சி கண்டு வருகின்றது. மாகாணசபை முறைமை மூலம்தான் அழிவடைந்த எமது பிரதேசத்தை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன அவர்களின் கொள்கைகள்தான் என்ன? தமிழ் மக்களுக்காக என்ன தீர்வுத் திட்டத்தினை முன் வைக்கின்றனர். எதிலும் அவர்கள் தெளிவில்லை, வெளிப்படையில்லை அவர்களிடம் இன்று ஒரு கொள்கை நாளை ஒரு கொள்ளை. தமிழீழம், தமிழீழ் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்றும் அரசுக்கு எதிராக கோசமிட்டு வந்தவர்கள் இன்று அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தைகளில் என்ன நடக்கிறது என்ற வெளிப்பாடுகூட இல்லை. இவர்கள் தங்கள் கொள்கைகளை மாற்றிவிட்டனரா? அப்படியானால் அவர்களின் கொள்கைகள் என்ன?
மட்டக்களப்பு மாவட்டம் பல்வேறு விதமாக தொடர்ந்தும் தமிழ் தலைமைகளினால் ஏமாற்றப்பட்டு வருகின்றது. இப்போது அரசுடனோ அல்லது வேறு சாராருடனோ இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகள் சந்திப்புக்கள், நிகழ்வுகளில் மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடம் கொடுக்கப்படுவதில்லை.
இந்த இடத்திலே கிழக்கு மாகாண மக்கள் வடக்குத் தலைமைகளினால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். கிழக்கு மக்களுக்காக தனியான ஒரு கட்சி வேண்டும் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவராகவும் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராகவும் இருக்கின்ற பிள்ளையான் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) அவர்களினதும் அவர்களது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினதும் கொள்கைகள் நிலைப்பாடுகள், கிழக்கு மாகாண சபையை சி.சந்திரகாந்தன் பொறுப்பேற்றதன் பின்னரான செயற்பாடுகள் தொடர்பாகவும் நாம் ஆராயவேண்டி இருக்கின்றது.
பிள்ளையான் அரசாங்கத்தோடு சேர்ந்து அரசாங்கத்தின் அடிவருடியாக இருக்கின்றான் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட வடக்கு தலைமைகளும் தமிழீழ ஆதரவாளர்களும், ஊடகங்களும் குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் அன்றுதொட்டு இன்றுவரை வடக்கைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் அரசுடன் அங்கம் வகித்து அமைச்சுப் பொறுப்புக்களை பெற்று வடக்கிலே தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்தனர் செய்து வருகின்றனர்.
வடக்கு அரசியல்வாதிகள் அரசுடன் சேர்ந்து தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதை ஏற்றுக் கொள்கின்ற இவர்கள் பிள்ளையான் அரசுடன் சேர்ந்துவிட்டார் என்பதனை ஏன் ஏற்றுக் கொள்ள முடியாது. கிழக்கு மாகாணசபை மூலம் கிழக்கு அபிவிருத்தி செய்யப்படுகின்றதே என்ன பொறாமையா? அல்லது காலம் காலமாக கிழக்கிலே தலைமைத்துவம் இல்லாமல் இருந்தது பிள்ளையான் கிழக்கின் கட்சி ஒன்றின் தலைவனாகிவிட்டான் வடக்கு தலைமைகளினால் கிழக்கு மக்களை ஏமாற்ற முடியாமல் போய்விடும் என்ற பயமா?
கருணாவும், பிள்ளையானும் புலிகளைக் காட்டிக் கொடுத்துவிட்டனர் என்று சொல்கின்றனர். காட்டிக் கொடுப்பவன்தான் மட்டக்களப்பான் என்று சொல்கின்றார்கள் முதலில் புலிகளைக் காட்டிக் கொடுத்தவர்கள் யார் ? நிட்சயமாக மட்டக்களப்பான் அல்ல.
தொடரும்...
www.shanthru.blogspot.com
10/27/2011
| 0 commentaires |
தீபாவளி நமது துக்கநாள்
புராணம் கூறுவது
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாக பூமி கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளையையும் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுர டனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனைக் கொல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகா சுரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந் தார்கள்.
10. இந்த மகிழ்ச்சி (நரகாசுரன் இறந்த தற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.
இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!
இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர் களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது.
பூமி தட்டையா? உருண்டையா?
சுருட்டினால் தூக்கி கட்கத்திலோ, தலைமீதோ எடுத்துப் போக முடியுமா?
எங்கிருந்து தூக்குவது?
கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?
விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்கவேண்டிய அவசியம் என்ன?
அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால், பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?
பூமி மனித உருவமா? மிருக உருவமா?
மனித உருவுக்கும், மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?
பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?
இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?
இவைகளைக் கொஞ்சமாவது தீபாவளி கொண்டாடும் - தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்கவேண்டாமா? நரகாசுரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகித்ஜோஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மகாணத்து அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள்.
வங்காளத்தில் தேவர்களும், அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்? இவை ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்து வதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லி கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவ தும் என்றால் இதை என்னவென்று சொல்வது?
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
பார்ப்பனர்களே உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லு கிறேன் என்றால், இக்கதை எழுதின காலத்தில் பார்ப்பனர்கள் (ஆரியர்) எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்கவேண்டும். அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது ஈன நிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.
10/26/2011
| 0 commentaires |
பட்டிருப்பு கல்வி வலையம் நடாத்தும் சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா.
இன்று (24.10.2011) மட்ஃகளுதாவளை மகாவித்தியாலத்தில் பட்டிருப்பு கல்வி வலையத்தினால் நடாத்தப்படும் சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா பட்டிருப்பு வலையக்கல்வி பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் தலமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைத்ததோடு பாடசாலைகளுக்கான கணணிகளையும் வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் புஸ்பகுமார, மட்டக்களப்பு வலையக்கல்வி பணிப்பாளர் திருமதி. பவளகாந்தன், கோட்டக்கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்
இந் நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் புஸ்பகுமார, மட்டக்களப்பு வலையக்கல்வி பணிப்பாளர் திருமதி. பவளகாந்தன், கோட்டக்கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்
| 0 commentaires |
மட்டக்களப்பு உயர் தொழிநுட்ப நிறுவன மாணவர்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதில் அதிக கவனம் செலுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி.
எமது பிரதேச மாணவர்கள் கல்வித்துறையில் இன்னும் முன்னேற்றமடைய வேண்டும். அதற்காகவே நான் பல திட்டங்களை செயற்படுத்தி வருகின்றேன். இந்த உயர்தொழிநுட்ப நிறுவனத்தையும் ஏனைய உயர்தொழிநுட்ப நிறுவனம்போல் வசதிகள் அத்தனையும் நிறைந்த ஒரு நிறுவனமாக மாற்றுவதற்கு என்னால் முடிந்தவற்றை செய்வேன் மட்டக்களப்பு உயர் தொழிநுட்ப நிறுவனத்தின் பிரச்சினைகள் தொடர்பாக தான் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். மட்டக்களப்பு உயர் தொழிநுட்ப நிறுவன மாணவர்கள் பல வருடங்களாக நிரந்தர இடமோ வசதிகளோ இன்றி தொழிநுட்பக் கல்லூரியிலே பயின்று வந்தனர். தற்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினதும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் அவர்களினதும் அயராத முயற்சியினால் நிரந்தரமான தனியான இடமும் 30 இலட்சம் ரூபாய் செலவில் தற்காலிக வகுப்பறை கட்டிடங்களும் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏனைய மாவட்டங்களில் இருக்கின்ற உயர் தொழிநுட்ப நிறுவனங்களில் இருக்கின்ற வசதிகள் எதுவும் இதுவரை மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களுக்கு கிடைக்கவில்லை பல அரசியல் பிரமுகர்களிடம் மாணவர் ஒன்றியம் பல தடவை வேண்டுகோள் விடுத்தும் எவரும் உயர்தொழிநுட்ப நிறுவன மாணவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காது இருக்கும்போது கிழக்கு மாகாண கல்வி வளர்ச்சியில் அக்கறையோடு செயற்படும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உயர் தொழிநுட்ப நிறுவனத்துக்கு நிரந்தர இடம் தற்காலிக கட்டிடம் கணணி உபகரணங்களை வழங்கி இருப்பதை ஒருபோதும் எமது மாணவர்கள் மறக்கக்கூடாது. மறக்கவும்மாட்டார்கள். முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களை நாம் முதலமைச்சராகப் பெற்றிருப்பது. மட்டக்களப்புக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும் மாணவர்கள் பழைய மாணவர்கள் சார்பிலே உரையாற்றிய பழைய மாணவர் குறிப்பிட்டார்.
உயர் தொழிநுட்ப நிறுவனத்தை தனியான ஒரு இடத்திலே கொண்டு வருவதற்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்கள் அயராது பாடுபட்டவர் அடிக்கடி உயர் தொழிநுட்ப நிறுவனத்துக்கு வந்து மாணவர்களோடு கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகளை பெற்றுத் தரும் ஒருவர் அவரின் சேவைகளையும் மாணவர்கள் பாராட்டினர். இந்நிகழ்வில் முதலமைச்சரினால் பல கணணி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் முதலமைச்சரின் பிரத்தியக செயலாளர் ரமேஸ் மண்முனைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் மேரி கிரிஸ்ரினா வள இணைப்பாளர் முத்துலட்சுமி விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் முதலமைச்சரின் பிரத்தியக செயலாளர் ரமேஸ் மண்முனைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் மேரி கிரிஸ்ரினா வள இணைப்பாளர் முத்துலட்சுமி விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
| 0 commentaires |
கிழக்கு மாகாணசபையின் 2012ம் வருடத்திற்கான நிதிப்பிரகடனம் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இன்று(25.10.2011) கிழக்கு மாகாண சபைஅமர்வு சபை தவிசாளர் எச்.எம்.பாயிஸ் தலமையில் இடம்பெற்றது. இச் சபையமர்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனினால் சபைத் தீர்மானத்திற்காக 2012ம் வருடத்திற்கான நிதிப்பிரகடனம் முன்வைக்கப்பட்ட போது சபை ஏகமானதாக ஏற்றுக் கொண்டது. பதினேழாயிரத்து இருநூற்று அறுபத்தெட்டு மில்லியன் (17268) பெறுமதி ஒதுக்கீட்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை சபையில் சமர்ப்பிப்பதற்கான நிதிப்பிரகடனத்தினை ஏகமானதாக ஏற்றுக்கொண்டார்கள். ஜனநாயக சோசலிச குடியரசின் தமிழ் பேசும் மக்களுக்கு எழுத்துமூலமாக கிடைத்துள்ள மாகாணசபை முறைமையினூடாக கடந்த 3வருடங்களாக புதிதாக உதையமான கிழக்கு மாகாணசபை மூலம் பல உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் வலுப்பெறுவதும் வீதி, பாலம், பாடசாலைகளென பல அபிவிருத்திப்பணிகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் 2011ம் வருடத்தில் ஏனைய துறைகளை விட கல்வித்துறைக்கு கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டது போல் 2012ம் வருடமும் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமென எதிர்பாக்கப்படுகின்றது.
10/24/2011
| 0 commentaires |
கிழக்கு முதல்வர் மண்முனைப்பற்று பிரதேச மக்களுடன் கலந்துரையாடல்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதல்வருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இன்று (23.10.2011) மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடா, புதுக்குடியிருப்பு, ஆரையம்பதி போன்ற கிராமங்களுக்குச் சென்று மக்களைச்சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து வீதி, மின்சாரம் மற்றும் வீடு போன்ற முக்கிய தேவைகளை நிவர்தி செய்து தருவதாக கூறினார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும், மண்முனைப்பற்று பிரதேசசபை தவிசாளர் மேரி கிரிஸ்ரினா , மண்முனைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
10/23/2011
| 0 commentaires |
முதலமைச்சர் செயலக உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல்.
முதலமைச்சர் செயலக உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலக உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் இன்று அமைச்சு செயலாளர் s.அமலநாதன் தலைமையில் வாழைச்சேனையில் நடைபெற்றது. இதில் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டதுடன் கடந்த வருடத்திற்கான செயற்பாடுகள் ஆராயப்பட்டதுடன் 2012ம் வருடத்திற்கான புதிய செயற்பாட்டுத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் உரை நிகழ்த்துகையில் கிழக்கு மக்களின் சமூகக் கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை கடந்த 3 வருடங்களாக மேற்கொண்டுவருவதை இட்டு பூரண உள திருப்தி அடைகின்றேன். இருந்தும் எமது கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்தினை மேலும் வலுப்படுத்த வேண்டியது அத்தியாவசியமாக உள்ளது. எதிர்வரும் 2012ம் வருடம் அடையாளம் காணப்பட்ட வாழ்வாதாரம் குறைந்த மக்களின் வாழ்வாதாரத்தினை வலுவாக்குவதற்கு எம்முடன் இணைந்து அனைத்து அதிகாரிகளும் மிக வேகமாக செயற்பட வேண்டும். வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலமே நிலையான அபிவிருத்தி நோக்கி பயணிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
| 0 commentaires |
ரி.எம்.வி.பி போட்டியிட்டு இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலை என்ன? **மட்டு நரசிம்மன்
கடந்த 8ம் திகதி நடைபெற்று முடிந்த 23 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலிலே 21 உள்ளுராட்சி மன்றங்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கைப்பற்றி அமோக வெற்றியீட்டி உள்ளது.
விசேடமாக கல்முனை மாநகர சபைத்தேர்தலை எடுத்துக்கொண்டால் 68198 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தும் 46580 பேர் மாத்திரமே வாக்களித்திருந்தார்கள். இதிலும் 948 வாக்குகள் செல்லுபடியற்றுப் போனமை குறிப்பிடத்தக்கது. இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 22356 வாக்குகளைப்பெற்று 11 ஆசனங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 9911 வாக்குகளைப் பெற்று 04 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 8524 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களையும் பெற்றிருக்கின்றது.
விசேடமாக கல்முனை மாநகர சபைத்தேர்தலை எடுத்துக்கொண்டால் 68198 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தும் 46580 பேர் மாத்திரமே வாக்களித்திருந்தார்கள். இதிலும் 948 வாக்குகள் செல்லுபடியற்றுப் போனமை குறிப்பிடத்தக்கது. இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 22356 வாக்குகளைப்பெற்று 11 ஆசனங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 9911 வாக்குகளைப் பெற்று 04 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 8524 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களையும் பெற்றிருக்கின்றது.
சுமார் 42000 முஸ்லிம் வாக்காளர்களையும் 26000 தமிழ் வாக்காளர்களையும் கொண்ட ஓர் பிரதேசம் கல்முனை மாநகராகும். இதிலே முஸ்லிம்கள் 11 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றார்கள். அதன்படி பார்த்தால் த.தே.கூட்டமைப்பினர் குறைந்தது 06 ஆசனங்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இம்முறை அது நடக்கவில்லை காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் வைத்திருக்கின்ற நம்பிக்கையை இழந்து விட்டார்கள். எந்தவொரு பலமான தமிழ் கட்சியினாலும் போட்டியின்றி போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வெறுமனே 04 ஆசனங்களை மாத்திரம்தான் பெற முடிந்திருக்கின்றது. இதனூடாக என்ன புலப்படுகின்றது என்றால் மக்கள் மீண்டும் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பசப்பு வார்த்தைகளை நம்பத் தயார் இல்லை என்பது தென்படுகின்றது.
சிலவேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கல்முனை மாநகர சபைத் தேர்தலிலே போட்டியிட்டிருந்தால் அக்கட்சியும் ஆகக் குறைந்தது 2000 வாக்குகளையாவது பெற்றிருந்தால் உண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலை என்னவாகி இருக்கும். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் ஒரு ஆசனத்திற்கு உள்ள வாக்குகள் வித்தியாசம் சுமார் 1388 ஆகும் எனவே முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 2000 வாக்குகளைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு ஆகக் குறைந்தது ஓர் ஆசனம் கிடைத்திருக்க வாய்ப்புக்கள் அதிகம். இவ்வாறாக அவர்களக்கு கிடைத்திருக்க வேண்டிய வாக்குகள் நிச்சயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பெற்றிருக்கின்ற வாக்குகளில் இருந்துதான் கிடைத்திருக்கும் ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கான வாக்குகள் குறைவடைந்திருக்கும். ஆசனங்களும் நிச்சயம் 2 தான் கிட்டியிருக்கும்.
சிலவேளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கல்முனை மாநகர சபைத் தேர்தலிலே போட்டியிட்டிருந்தால் அக்கட்சியும் ஆகக் குறைந்தது 2000 வாக்குகளையாவது பெற்றிருந்தால் உண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலை என்னவாகி இருக்கும். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் ஒரு ஆசனத்திற்கு உள்ள வாக்குகள் வித்தியாசம் சுமார் 1388 ஆகும் எனவே முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 2000 வாக்குகளைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு ஆகக் குறைந்தது ஓர் ஆசனம் கிடைத்திருக்க வாய்ப்புக்கள் அதிகம். இவ்வாறாக அவர்களக்கு கிடைத்திருக்க வேண்டிய வாக்குகள் நிச்சயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பெற்றிருக்கின்ற வாக்குகளில் இருந்துதான் கிடைத்திருக்கும் ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கான வாக்குகள் குறைவடைந்திருக்கும். ஆசனங்களும் நிச்சயம் 2 தான் கிட்டியிருக்கும்.
இவ்வாறான நிலை ஒன்று ஏற்பட்டிருப்பின் கல்முனை மாநகர சபையின் எதிர் கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமைந்திருக்கும். இல்லாவிடின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினது ஆதரவினை பெற்றாவது எதிர் கட்சியாக இருந்திருக்கும். அப்போது த.தே.கூட்டமைப்பு செல்லாக்காசாக மாறி இருக்கும் எனவே த.தே.கூட்டமைப்பின் ஆசனங்கள் பாதுகாக்கப்பட்டமைக்கு பிரதான காரணம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி போட்டி இடாமையே ஆகும். கிழக்கு மாகாணத்திலே முதலமைச்சராக இருந்து கொண்டு பல்வேறு அபிவிருத்திகளை செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் தலைமையிலான கட்சிக்கு 2000 வாக்குகள் பெறுவது என்பது இயலாத காரியமல்ல. அதே வேளை அம்பாறை மாவட்டத்திலே கல்முனையை அண்டிய நாவிதன்வெளி பிரதேசத்தை சேர்ந்த ஒரு மாகாண சபை உறுப்பினரும் இருக்கின்றார் எனவே நிச்சயம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஒரு ஆசனம் பெற்றிருக்கும் என்பது யாவரும் அறிந்த உண்மை.இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உண்மை நிலை புரிந்திருக்கும்.
எனவே எது எவ்வாறாயினும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி போட்டியிடாததனால் ஓரளவு தப்பித்து விட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதும் மட்டும் யாராலும் மறுக்க முடியாத உண்மை ஆகும் என்பதே வெளிப்படை. கடந்த 2006ம் ஆண்டு கல்முனை மாநகர சபைத் தேர்தலிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 10 ஆசனங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 06 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 02 ஆசனங்களையும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு 01 ஆசனத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு:- கடந்த நாடாளுமன்ற தேர்தலிலே விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனித்துப் போட்டியிட்டு 16886 வாக்குகளைப் பெற்றிருந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் சேர்ந்து போட்டியிட்டிருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட ஆசனம் குறைந்திருக்கும் அதே போன்று கல்முனை மாநகர சபைத் தேர்தலிலே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி போட்டியிடாததனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனம் பாதுகாக்கப்பட்டிருக்கு.
10/22/2011
| 0 commentaires |
கடாஃபி மரணம்: "விசாரணை வேண்டும்"
கர்ணல் கடாஃபி கொல்லப்பட்ட விதம் தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கடாஃபி பிடிக்கப்பட்ட சமயத்தில் உயிரோடு இருந்துள்ளார் பின்னர் உயிரிழந்துள்ளார் என்று காட்டும் கைத்தொலைபேசி வீடியோ படங்கள் மிகவும் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளன என்று ஐநா மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை சார்பாகப் பேசவல்லவர் தெரிவித்துள்ளார்.
கர்ணல் கடாபியை தண்டனை நிறைவேற்றும் பாணியில் கொல்லவில்லை என லிபியாவின் இடைக்கால அரசாங்கம் கூறுகிறது.
தமது படைகளுக்கும் கடாஃபி விசுவாசப் படைகளுக்கும் இடையில் சர்த் நகரத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் கடாஃபி தலையில் குண்டடி பட்டிருந்தது என இடைக்கால அரசு கூறுகிறது.
சடலங்கள்
மிசுராதா நகரத்தில் குளிரூட்டப்பட்ட பெரிய அறையொன்றில் கடாஃபியின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
உடல் அடக்கம் பற்றிய திட்டங்கள் இன்னும் முடிவாகவில்லை.
கர்ணல் கடாஃபியின் மகன்மாரில் ஒருவரான முதஸ்ஸிம்மின் சடலமும் குளிர் அறையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
கழுத்திலும் மார்பிலும் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் முதஸ்ஸிம்மின் உடலில் காணப்படுகின்றன.
கர்ணல் கடாஃபியின் வாரிசாக - அடுத்த ஆட்சியாளராக உருவெடுக்கலாம் என்று பரவலாக கருதப்பட்ட இன்னொரு மகனான சயிஃப் அல் இஸ்லாம், சர்த் நகரை கிளர்ச்சிப் படைக் கைப்பற்றிய பின்னர், அங்கிருந்து கடந்த வியாழக்கிழமை தப்பிச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
காயப்பட்டிருந்த நிலையில் சயீஃப் கிளர்ச்சிப்படையினரால் பிடிக்கப்பட்டுவிட்டதாக இடைக்கால நிர்வாகத்தின் சில உறுப்பினர்கள் கூறுகின்ற போதிலும், அந்த தகவலை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
| 0 commentaires |
எமது மாவட்ட மக்கள் இன்னமும் கையேந்தும் நிலையிலேயே இருக்கவேண்டும் என்பதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் விருப்பம்********* மட்டு நரசிம்மன்
********* மட்டு நரசிம்மன்
அண்மையில் ஓர் பத்திரிகையிலே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் அறிக்கை அரசனுமான அரியனேந்திரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார், அவுஸ்ரேலியாவிலே இருக்கின்ற வடமாகாண மக்கள் ஒன்றியம் ஒன்று கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்ற பல செயற்பாடுகளைச் செய்திருக்கின்றார்கள் என்று. அதுவும் வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழ பிரதேசம் என்பதனாலே தான் அவர்கள் தொடர்ந்து எமது மாகாணத்திற்கு உதவி செய்து கொண்டிருக்கின்றார்கள். எனவே நாம் வடக்கு கிழக்கை பிரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலே குறிப்பிட்டுள்ள அவுஸ்ரேலியாவில் உள்ள ஓர் வடமாகாண அமைப்பு வழங்கிய நிதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓர் பாராட்டுவிழாவில் கலந்து கொள்ளும் போதுதான் அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ஏன் இவர்களுக்கு கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட பல அமைப்புக்கள் இன்னமும் வெளிநாட்டிலிருந்து கொண்டு பல்வேறு உதவிகளை எமது மாவட்டத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஏதாவது கொடுத்தால் கணக்கு கேட்டுவிடுவார்கள் என்ற பயம்.
நல்ல ஒரு உதாரணம் கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது எமது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் லண்டனுக்குச் சென்று எமது மாவட்டத்திலே பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு நிவாரணநிதி சேகரித்தார்;. மிகவும் பெரியதொரு தொகைப்பணத்தை அங்குள்ள எமது மாகாண மக்கள் சேர்த்துக் கொடுத்திருந்தார்கள். ஆனால் அதற்கு எந்தவொரு கணக்கறிக்கையும் இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லையாம்.
இதனால் அப்பணங்களை சேகரித்து அனுப்பிய அந்த அமைப்பின் தலைவர் ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறார். கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற ஒரு முக்கிய அரசியல் பிரமுகருக்கு, அதற்கு அந்த அரசியல் பிரமுகர் குறித்த அந்த ஈமெயிலுக்கு பதிலளிக்கையில் இதனை நான் விசாரனை செய்யமுடியாது. வெளியில் இதுபற்றி நான் மக்களுக்கு தெரியப்படுத்தினால் அது அரசியல் பழிவாங்கல், பொய்ப்பிரச்சாரம் என்று கூறுவார்கள். எனவே பாவம் அந்த உதவி செய்த மனிதர். அவர் சாதாரணமானவர் அல்ல அவர் ஒரு டாக்டர்;, தற்போது மனம் நொந்து போய் இருக்கின்றார்.
இதனால் அப்பணங்களை சேகரித்து அனுப்பிய அந்த அமைப்பின் தலைவர் ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறார். கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற ஒரு முக்கிய அரசியல் பிரமுகருக்கு, அதற்கு அந்த அரசியல் பிரமுகர் குறித்த அந்த ஈமெயிலுக்கு பதிலளிக்கையில் இதனை நான் விசாரனை செய்யமுடியாது. வெளியில் இதுபற்றி நான் மக்களுக்கு தெரியப்படுத்தினால் அது அரசியல் பழிவாங்கல், பொய்ப்பிரச்சாரம் என்று கூறுவார்கள். எனவே பாவம் அந்த உதவி செய்த மனிதர். அவர் சாதாரணமானவர் அல்ல அவர் ஒரு டாக்டர்;, தற்போது மனம் நொந்து போய் இருக்கின்றார்.
இவ்வாறான செயற்பாடுகளினால் எமது மாகாணத்தவர்கள் எமது மாவட்டத்திற்கு செய்கின்ற உதவிகளும் இல்லாமல் போகின்றது. இத்தனை சாகசங்களையும் புரிந்த அந்த ஆசாமி வேறுயாருமல்ல நெற்றியில் பட்டையும் களுத்தில் உருத்திராக்கக் கொட்டையும் அணியும் அந்த ஆசாமிதான். இந்த ஆசாமியால் கையூட்டு செய்யப்பட்ட தொகை சுமார் 3கோடிரூபாய் ஆகும்.
எனவே தொடர்ந்து எமது மாவட்ட மக்களை கையேந்துகின்ற சமூகமாகவே வைத்திருக்க விரும்புகின்ற இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு மட்டக்களப்பான் என்ற வகையில் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். அதாவது தற்போது எமது மாவட்ட மக்கள் தங்களது பொருளாதாரத்தை தாங்களே ஈட்டி சுயகௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். மீண்டும் மீண்டும் யாரையோ நம்பி இருக்கவேண்டிய தேவயில்லை.
எனவே தொடர்ந்து எமது மாவட்ட மக்களை கையேந்துகின்ற சமூகமாகவே வைத்திருக்க விரும்புகின்ற இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு மட்டக்களப்பான் என்ற வகையில் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன். அதாவது தற்போது எமது மாவட்ட மக்கள் தங்களது பொருளாதாரத்தை தாங்களே ஈட்டி சுயகௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். மீண்டும் மீண்டும் யாரையோ நம்பி இருக்கவேண்டிய தேவயில்லை.
அவர்கள் தங்களது மாவட்டத்திலே இருக்கின்ற வளங்களை பூரண பயன்பாடுள்ளதாக மாற்றி முழுமையான உற்பத்தியினைப் பெற்று பொருளாதாரத்தை உயர்த்தி வாழ்வாதாரத்தில் மேலோங்க முயற்சிப்பார்கள். நீங்கள்தான் தேவையற்ற பசப்பு வர்த்தைகளை கூறி மீண்டும் மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டாம் என்பது எனது தயவான வேண்டுகோள். நான் சிந்திப்பது உன்மையான விடையம் இதை நீங்கள் ஏன் சிந்திக்க வில்லை? மிகவும் கவலையாக உள்ளது. எமது மாவட்ட மக்களை நினைத்தால்.
தொடரும்………….
| 0 commentaires |
பாட்டாளிபுரம் அ.த.க. வித்தியாலயத்திற்கு பாண்ட் வாத்தியக் கருவிகள் முதலமைச்சரினால் அன்பளிப்பு
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட கஸ்டப் பிரதேச பாடசாலைகளில் ஒன்றான பாட்டாளிபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒரு தொகுதி பாண்ட் வாத்திய கருவிகளை அன்பளிப்புச் செய்துள்ளார்.
இந் நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் பிரதி அதிபர் தலைமையில் இடம் பெற்றது.மிகவும் பல கஸ்டத்தின் மத்தியில் கல்வி பயின்று வரும் மாணவர்களின் நன்மை கருதி முதலமைச்சர் சந்திரகாந்தன் இப் பாடசாலைக்கு இரண்டடு மாடிக் வகுப்பறைக் கட்டிடத் தொகுதி ஒன்றினை தனது நிதிஒதுக்கீட்டின் மூலம் அமைத்துக் கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
| 0 commentaires |
அடைய முடியாத இலட்சியத்திற்காய் இருப்பதையும் இழக்கக் கூடாது – கிழக்கு முதல்வர்.
காலங் காலமாக எமக்கு ஏதோ ஓர் மாயைக் காட்டி எம்மை மீளமுடியாத நிலைக்கு இட்டுச் சென்ற எம் தமிழ் மக்களுக்கான ஏகதலைவர்கள் என மார்தட்டிய தமிழ் பெரும் அரசியல் கட்சிகள் எல்லாம் தற்போது என்ன செய்வதென அறியாது தங்களுக்குள்ளே தாங்கள் அடித்துக்கொள்கின்ற ஓர் சூழல் உருவாகி இருக்கின்றது. என்று தமிழீழ பிரகடணம் கொண்டுவரப்பட்டதோ அன்றிலிருந்து இன்று வரை எமது தமிழ் மக்களுக்கான உன்மையான வழி எது என்பதனை இவர்களுக்கு காட்ட இயலாது போனது வேடிக்கையே!
அன்று முதல் இன்று வரை எம் மக்களுக்கான கொள்கை என்ன என்பதனை தெளிவுபட யாருமே சொல்லவில்லை. ஆனால் அடையமுடியாத இலட்சியங்களாக இருக்கின்ற தமிழீழக் கோரிக்கைக்குப் பின்னால் எம் மக்களை உணர்ச்சிவசப்படுத்தி அவர்களை இழுத்துச்சென்று தமிழ் மக்களுக்காய் எஞ்சி இருப்பவை;களையும் இழக்கச் செய்கின்ற செயலை தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்து வருகின்றது. இதன் பின்னால் மக்கள் இனிமேல் செல்ல மாட்டார்கள். அதுவும் விசேடமாக கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஒருபோதும் செல்லக்கூடாது என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தெரிவித்தார்.
இன்று (20.10.2011) திருகோணமலை ஸ்ரீ சன்முகா இந்து மகளிர் கல்லூரியில் கல்லூரியின் அதிபர் திருமதி சுலோசனா ஜெயபாலன் தலைமையில் இடம்பெற்ற வருடார்ந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நான் குற்றம் சாட்டுவதற்கு என்ன காரணம் என்றால் இவ்வளவு காலமும் அதாவது இலங்கையில் என்று தமிழ் மக்களுக்கான அரசியல் கட்சி உதயமானதோ அன்றிலிருந்து இன்றுவரை தாங்கள் தமிழ் மக்களுக்கான அடிநாதம், உயிர்மூச்சு என பேசிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களால் எம்மக்களுக்கு எந்தப் பயனும் கிட்டியதில்லை. உண்மையில் மக்களுக்கான உண்மையான ஓர் அரசியல் கட்சி என்றால் அம்மக்களுக்கான தேவைகள், அபிவிருத்தி விடயங்கள், உரிமை மற்றும் அவர்கள் எதிர் கொள்கின்ற பிரச்சினைகள், முகங்கொடுக்கும் சவால்கள் என எல்லாவற்றையும் அறிந்து அதற்கேற்றாப்போல் செயற்பட வேண்டும்.
இன்றுவரை அவர்கள் 11சுற்றுப் பேச்சு அரசுடன் நடாத்தி இருக்கின்றார்கள். ஆனால் அதனால் என்ன பயன் வெறுமனே பத்திரிகைகளில் மாத்திரம் கொட்டெழுத்தில் செய்தி பிரசுரம் ஆகும். சரி இவர்கள் எதுபற்றித்தான் பேசுகின்றார்கள் என்றாவது இவர்கள் தெரிவிக்கின்றார்களா? அதுவும் இல்லை. இப்படித்தான் அவர்கள் எம்மை காலங்காலமாக ஏமாற்றி தமிழீழம், விடுதலை, உரிமை என்கின்ற வார்த்தை பிரையோகங்களை முன்நிறுத்தி எம்மை உணர்ச்சிவசப்படுத்தி போர்க்களம் அனுப்பி அங்கே கொலைக்களம் கண்டவர்கள்.
இவர்களோ அல்லது இவர்களது பிள்ளைகளோ அல்லது நெருங்கிய அதாவது அவர்களது சகோதரர்களோ போராட்டத்திற்கு நேரடி பங்களிப்பு செய்யவும் இல்லை. அதன் வலியை உணர்ந்ததும் இல்லை. இப்படி எம் இளைஞர் யுவதிகளின் குருதியில் குளிர்காய நினைத்து இன்றும் காய்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது. அவர்களால் அபிவிருத்திதான் செய்ய இயலாது, செய்கின்ற எங்களையாவது விட்டுவிடலாம் அல்லவா? இன்று கிழக்கு மாகாணத்தை பாருங்கள் என்ன குறை இருக்கின்றது. அனைத்து துறைகளும் அபிவிருத்தி கண்டுவருகின்றது. நெடுஞ்சாலைகள், மீன்பிடி, விவசாயம், கல்வி, சுகாதாரம், உல்லாசம், சுயதொழில், வாழ்வாதாரம் என அனைத்தும் எமது மாகாணத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இவ்வாறான அபிவிருத்திகளை ஏன் இவர்களால் இவ்வளவு காலமும் செய்ய இயலாது போனது என நான் இவர்களிடம் கேட்கின்றேன். நான் தொடர்ந்தும் கிழக்கு மக்களுக்காய் உழைப்பேன் எனது கட்சியும் அதன்படியே செயற்படும் எனவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் திருகோணமலை நகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் கௌரி முகுந்தன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.பத்மகுமார, வலயக் கல்விப் பணிப்பாளர் கி.முருகுபிள்ளை மற்றும் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
10/21/2011
| 0 commentaires |
கிழக்கு முதல்வரினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பலகிராம வீதிகளின் நிர்மாண வேலைகள் வைக்கப்படவுள்ளன.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபையை பொறுப்பேற்றதன் பின்னர் கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி கண்டு வருகின்றது.
தொடரும் அபிவிருத்தித் திட்டங்களில் வீதி அபிவிருத்தித் திட்டங்களும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தொடரும் அபிவிருத்தித் திட்டங்களில் வீதி அபிவிருத்தித் திட்டங்களும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் 02.11.2011 அன்று பட்டிப்பளை பிரதேசத்துக்குட்பட்ட முனைக்காடு காளி கோவில் வீதி நாகமுனைவீதி தாலையடித்தெரு எனும் வீதிகளின் நிர்மாணப் பணிகளும்.
எதிர்வரும் 07.11.2011 மண்முனை மேற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மகிழவெட்டுவான் பாடசாலைவீதி உன்னிச்சை 8ம் போஸ்ட் வீதி நரிப்புல் தோட்டம் மகிழவெட்டுவான் வீதிகளின் நிர்மாணப்பணிகளும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தக்குட்பட்ட புதிய வன்னியார் வீதி திருப்பெருந்துறை 4ம் குறுக்குத்தெரு திருப்பெருந்துறை 3ம் குறுக்குத்தெரு வீதிகளின் நிர்மாண வேலைகளும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts
(
Atom
)