9/23/2011

பிளவடைந்தது Nஜ.வி.பி சதிகளை தோற்கடித்து கட்சிக்கு உயிரூட்டுவோம்

  ஜே. வி. பிக்குள் பூதாகரமான பிரச்சினைகள் எழுந்துள்ளன என்பது உண்மைதான். எனினும் இவற்றை முற்றாக தோல்வியடையச் செய்து கட்சியை பலமானதாக உருவாக்குவதற்குரிய அனைத்து முயற்சிகளிலும் நாம் ஈடுபட்டு ள்ளதாக ஜே. வி. பி.யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. நேற்று தெரிவித்தார்.
ஜே. வி. பி. இரண்டாக பிளவுபடுகிறது. புதிய கட்சி உருவாகிறது என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இதன் உண்மை நிலை தொடர்பாக ஜே. வி. பி. எம்.பி. விஜித ஹேரத்திடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜே.வி.பி. என்பது பலமான ஒரு கட்சி அதனை பிளவுபடுத்த, உடைத்தெறிவது என்பது இயலாத காரியம். எனினும் கட்சியிலிருந்து பிரிந்து சென்று சில குழுக்களாக இயங்குவதும். தனியான கட்சியை ஆரம்பிப்பதும் நடந்துவந்துள்ளது.
எனினும், இம்முறை கட்சிக்கு பூதாகரமான பிரச்சினை தோன்றியிருக்கிறது. இவற்றை துடைத்தெறிவதற்குரிய அனைத்து முயற்சிகளிலும் நாம் ஈடுபட்டுள்ளோம் என்றும் விஜித ஹேரத் எம்.பி. குறிப்பிட்டார்.
தேசிய அரசியல் தொடர்பான கொள்கைகள் சிலவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பாக தற்போதைய ஜே.வி.பி. தலைமைக்கும் அதிருப்தியாளர்கள் சிலருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இந்த நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது.
உட்கட்சிப் பூசல்களால் மக்கள் விடுதலை முன்னணி இரண்டாகப் பிளவுபடும் நிலைமையை எதிர்நோக்கியுள் ளது. அதேசமயம், ஜே.வி.பி. யின் முன்னணி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
தேசிய அரசியல் தொடர்பான கொள்கைகள் சிலவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் தற்போதைய ஜே.வி.பி.யின் தலைமைக்கும், அதிருப்தியாளர்கள் சிலருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இந்த நிலைமைக்குக் காரணமென்று தெரிவிக்கப்படுகிறது.
தேசிய அரசியலில் ஜே.வி.பி. கடந்த காலங்களில் எடுத்த முடிவுகள் தவறான பிரதிபலன்களைத் தந்திருப்பதாகவும், அதனால் ஏற்பட்டிருக்கும் பெரும் பின்னடைவைச் சீர்செய்ய அடிமட்டத்திலிருந்து மாற்றங்களைச் செய்யவேண்டுமெனவும் ஜே.வி.பி. அதிருப்தியாளர்கள் கட்சித் தலைமையிடம் சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், இந்த விடயம் விவாதத்திற்குள்ளானதால் அதிருப்தியாளர்கள் சிலர் கட்சியிலிருந்து வெளியேறி புதிய அரசியல் கட்சியை உருவாக்கத் தீர்மானித்துள்ளனர். ஜே.வி.பி. அரசியல் குழுவின் முக்கிய உறுப்பினராகக் கருதப்படும் பிரேம்குமார் குணரட்னம் தலைமையின் கீழ் இந்த அதிருப்தியாளர் குழு இயங்குவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஜே.வி.பி.யின் முக்கியஸ்தர்களில் ஒருவரும் ஜே.வி.பி. தொழிற்சங்க தலைவருமான லால் கார்ந்தவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது:
கடந்த முறை நடைபெற்ற மத்திய செயற் குழுக் கூட்டத்தின்போது அரசியல் அதியுயர் பீட தெரிவில் முன்பிருந்த இருவர் தெரிவு செய்யப்படவில்லை அவர்கள் இருவரின் பெயரைக் குறிப்பிட்டே செய்திகள் வெளியாகின்றன.
எனினும் ஜே.வி.பியை முறியடிக்க பிளவுபட வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அதனை முறியடிக்க ஆயத்தமாகவே இருக்கிறோம். பிரதேச ரீதியான எமது கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் இது பற்றி தெளிவுடனேயே இருக்கிறோம் என்றும் லால்காந்த தெரிவித்தார்.


0 commentaires :

Post a Comment