9/20/2011

ஐ.நா. கூட்டத்தொடரில் பங்குபற்ற ஜனாதிபதி நேற்று நியூயோர்க் பயணம்

ஐக்கிய நாடுகள் சபையின் 66வது பொது சபை கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று காலையில் (19ம் திகதி) ஐக்கிய அமெரிக்காவுக்குப் பயணமானார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 66வது பொதுச் சபை அமர்வு கடந்த 13ம் திகதி நியூயோர்க் நகரில் அமைவுற்றிருக்கும்.
ஐ.நா. தலைமையகத்தில் ஆரம்பமானது. இந்த அமர்வில் 193 நாடுகள் பங்கு பற்றுகின் றன.
ஐ.நா. சபையின் 66வது பொதுச் சபை அமர்வில் அரச தலைவர்கள் பங்குபற்றும் மாநாடு எதிர்வரும் 22ம், 23ம் திகதிகளில் நடைபெறவிருக்கின்றது. இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விஜயம் செய்துள்ளார்.
இம்முறை மாநாட்டின் தவிசாள ராக கட்டார் நாட்டின் பிரதிநிதியான முன் னணி இராஜதந்திரி நைசர் அப்துல் அkஸ் அல் நஸ்ஸார் செயற்பட வுள்ளார்.

0 commentaires :

Post a Comment