9/09/2011

காத்தான்குடிபிரதான வீதியில் பாரிய ஆர்ப்பாட்டமும் மறியல் போராட்டமும் _

கல்முனை -மட்டக்களப்பு பிரதான வீதியில் போக்குவரத்தை தடைசெய்து காத்தான்குடி நகரசபைப்பிரதேசத்தில் தினமும் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் பெற்றுத்தருமாறு கோரி இன்று காலை முதல் காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் அஸ்பர் தலைமையில் பாரிய வீதிமறியல் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் இடம் பெற்றது.

இப்போராட்டத்தில் கிழக்குமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் உட்பட நகரசபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்களும் பங்கு கொண்டுள்ளனர்.

காலை 10மணிக்கு ஆரம்பமான போராட்டம் தொடர்ந்து 4 மணிநேரம் இடம்பெற்றது. இப்பகுதியில் தினமும் சேரும் குப்பைகளை ஆரம்பத்தில் ஊரின் ஆற்றங்கரையோரத்திலும் பின்னர் காத்தான்குடியின் எல்லைப்புறமான கர்பலா காட்டுப்பகுதியிலும் இதுவரை கொட்டிவந்தனர்.

ஆனால் அண்மையில் ஆரையம்பதி பிரதேச சபை நிர்வாகம் தங்களது பகுதிக்குள் குப்பை கொட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்தியதையடுத்து காத்தான்குடியில் குப்பைகளைக்கொட்ட இடமில்லாமல் கடந்த 5 நாட்களாக சேகரிக்கப்பட்ட குப்பைகளை கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் நகரசபைக்கு முன்னால் கொட்டி அவ்விடத்திலேயே போராட்டமும் இடம்பெறுகின்றது. போராட்டம் காரணமாக இவ்வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

பல தடவைகள் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் ஒதுக்கித்தருமாறு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபரைக்கேட்டும் அது நடைபெறவில்லையென நகரபிதா எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment