9/11/2011

ஆலயடிவேம்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஆலயடி வேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அபிவிருத்தி தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு அப்பிரதேசத்தின் முக்கியமான தேவைகளை அப்பிரதேச மக்களிடம் கேட்டறிந்து கொண்டார். இக்கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் பியசேன, கிழக்கு மாகாண விவசாயம் மற்றும் கால்நடை அமைச்சர் து.நவரெட்ணராஜா, மாகாணசபை உறுப்பினர் புஸ்பராஜா, பூ.பிரசாந்தன் மற்றும் பிரதேச செயலாளர், ஆலயடிவேம்பு பிரதேசசபை தவிசாளர், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment