9/02/2011

ஆயுதங்களை ஒப்படைக்க நேபாள மாவோயிஸ்டுகள் சம்மதம்

அரசின் சிறப்புக் குழுவிடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக நேபாள மாவோயிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
நேபாள ஆட்சியில் மாவோயிஸ்டுகளின் கை ஓங்கியுள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேபாள ஐக்கிய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் நேபாள பிரதமராக பாபுராம் பட்டராய் இரு நாட்களுக்கு முன் பதவியேற்றுள்ளார். அந்நாட்டில் ஆயுதம் ஏந்தி போராடி வந்த மாவோயிஸ்டுகள் அமைதி வழிக்குத் திரும்பி தேர்தலில் வெற்றி பெற்றனர்.
எனினும் ஆயுதங்களை அவர்கள் ஒப்படைக்கவில்லை. அவர்களிடம் 7 படைப் பிரிவாக ஆயுதப் பயிற்சி பெற்ற 19,200 வீரர்கள் உள்ளனர் இவர்கள் நாட்டில் மொத்தம் 21 இடங்களில் முகாம் அமைத்து தங்கியுள்ளனர்.

0 commentaires :

Post a Comment