9/13/2011

முதலாவது பெண் சட்டமா அதிபர் நேற்று பதவியேற்பு

ஜனாதிபதி சட்டத்தரணி திருமதி சாந்தி ஈவா வனசுந்தர புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று (12) நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டமாஅதிபர் திணைக்களத்தின் 126 வருடகால வரலாற்றிலே அதன் பிரதான கதிரைக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டது இதுவே முதற் தடவையாகும்.
திருமதி வனசுந்தர சட்டமாஅதிபர் திணைக்களத்தில் சுமார் 32 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.
சட்டமா அதிபராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றிய இவர் 1979 ஆம் ஆண்டு அரச சட்டத்தரணியாக இத்திணைக்களத்தில் இணைந்துள்ளார்.
பன்னிப்பிட்டி தர்மபால வித்தியாலயத்தில் உயர் தரத்தில் சித்தியடைந்து சட்டக் கல்லூரியில் நுழைந்த திருமதி வனசுந்தர 1977 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
அரசாங்க சிரேஷ்ட சட்டத்தரணி பிரதி சொலிசிட்டர் ஜெனரல், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல் ஆகிய பதவிகளை வகித்த அவர் 7 வருடங்கள் சட்டமாஅதிபராக பதில் கடமை புரிந்துள்ளார்.
ட்டமாஅதிபர் திணைக்களத்தின் 26 ஆவது சட்டமாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ள அவர், இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.
திருமதி வனசுந்தரவிற்கான நியமனக் கடிதம் நேற்று (12) காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது. (ஏ-k)
திருமதி வனசுந்தர சட்டமாஅதிபர் திணைக்களத்தில் சுமார் 32 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.
சட்டமா அதிபராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றிய இவர் 1979 ஆம் ஆண்டு அரச சட்டத்தரணியாக இத்திணைக்களத்தில் இணைந்துள்ளார். பன்னிப்பிட்டி தர்மபால வித்தியாலயத்தில் உயர் தரத்தில் சித்தியடை ந்து சட்டக் கல்லூரியில் நுழைந்த திருமதி வனசுந்தர 1977 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
அரசாங்க சிரேஷ்ட சட்டத்தரணி பிரதி சொலிசிட்டர் ஜெனரல், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல் ஆகிய பதவிகளை வகித்த அவர் 7 வருடங்கள் சட்டமாஅதிபராக பதில் கடமை புரிந்துள்ளார்.

0 commentaires :

Post a Comment