9/02/2011

கொழும்பு - மட்டு ரயில் ட்ரக்டருடன் மோதி விபத்து: ஒருவர் ஸ்தலத்தில் பலி மூவர் காயம்; ரயில்வே கடவையை கடக்க முயன்றபோது புணானையில் சம்பவம்

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், உழவு இயந்திரமொன்றுடன் மோதியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் நேற்று அதிகாலை புணானை, தேக்கன்கேணியிலுள்ள ரயில்வே கடவையில் நடந்துள்ளது. ரயில் வருவதை பொருட்படுத்தாத உழவு இயந்திர சாரதி, அவசர அவசரமாக கடக்க முற்பட்ட வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
படம்: முர்ஷித்

சம்பவத்தில் உயிரிழந்தவர் 64 வயதுடைய நாகூர் லெவ்வை அப்துல் காதர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.
காயமடைந்த மற்ற மூவரும் ஓட்டமாவடி 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த காதர், ஹனீபா மற்றும் ஜமால் என்பவர்களாவர். இவர்களில் ஜமால் என்பவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. மரணித்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment