9/17/2011

திருமலை மாவட்ட பாடசாலைகளுக்கு முதலமைச்சர் திடீர் விஜயம்.


திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று (15ஃ09ஃ2011) திடீர் விஜயம் மேற்கொண்டு அப்பாடசாலை நிருவாகத்தினருடன் கலந்துரையாடி அவர்களது உடனடி தேவைகள் சிலவற்றை ருவதாக அவர் உறுதியளித்தார். விசேடமாக தளபாட வசதிகள் அதாவது உடைந்திருக்கின்ற தளபாடங்களை சீர்செய்தல் குடிநீர்ப்பிரச்சனை, மலசல கூடம் மற்றும் நிருவாக தேவைகளுக்கான உபகரணங்கள் என குறிப்பிட்ட சில தேவைகள் குறித்து கவனம் செலுத்தி சில பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வும் காணப்பட்டது. முதலமைச்சர் இன்று திருகோணமலை மாவட்டத்தின் விஜயம் செய்த பாடசாலைகளில் சில பின்வருமாறு.
1.சிறி சன்முகா
2.சென் மேரிஸ் கொலிச்
3.இ.கி.ச சிறி கோணேஸ்வரா இந்துக்கல்லூரி
4.ஸ்ரீ வாணி வித்தியாலயம்.
5.ஸ்ரீ கோணலிங்க மகாவித்தியாலயம்.

0 commentaires :

Post a Comment